- slide, ஆன்மீக சுற்றுலா, தற்போதைய செய்திகள், புண்ணிய தலங்கள்

மலேசியாவை மிஞ்சிய தமிழ் கடவுள் முருகன் தமிழகத்தில்!!

தமிழ் கடவுள் முருகனுக்கு தமிழகத்தில், உலகிலேயே மிக பெரிய சிலை!! சேலத்தில் உருவாகிறது.

மலேசியாவுக்கு போட்டியாக களமிறங்கிய தமிழகம்

முருகன் சிலை மட்டும் 126 அடி உயரம் + 19 அடி உயர பீடம் என 145 அடி உயரத்துடன் மிக பிரமாண்டமாக உருவாக்கப்படுகிறது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புத்திரகவுண்டன் பாளையத்தில் அமையும் 145-அடி உயர பிரம்மாண்ட முருகன் சிலை பக்தர்கள் மனதில் மட்டுமின்றி உலக வரைப்படத்திலும் முக்கிய இடம் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் பத்துமலை குகைக் கோயிலின் நுழைவு வாயிலில் உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டது. 140 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த முருகன் சிலையை மிஞ்சும் அளவிற்கு தமிழகத்தில் 145 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் பணி சுமார் இரண்டு வருடங்களாக சேலம் அருகே நடந்து வருகிறது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள புத்திரகவுண்டன் பாளையத்தில் தான் மிக உயரமான முருகன் சிலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் பணி நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தாண்டு திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் உள்ள பத்து மலை கோயிலில் முருகன் சிலையை வடிவமைத்த தமிழகத்தை சேர்ந்த திருவாரூர் தியாகராஜன் ஸ்தபதி அவர்கள் தான்,  தற்போது சேலம் வாழப்பாடியில் அமையவுள்ள இந்த முருகன் சிலையையும் வடிவமைத்து வருகிறார்.

சேலம் ஆத்தூரைச் சேர்ந்த தொழிலதிபரும் தீவிர முருக பக்தருமான ஸ்ரீதர் என்பவர் தான் இந்த 145 அடி உயர முருகன் சிலை அமைப்பதற்கு பணம் கொடுத்துள்ளார்.

இவருக்கு சொந்தமான நிலத்தில்தான் பிரமாண்ட முருகன் சிலையை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அவர் சொந்த செலவில் முருகன் சிலை அருகே பெரிய மண்டபம் கட்டி ஏழை எளியோருக்கான அன்னதானத் திட்டத்தை செயல்படுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார் ஸ்ரீதர்.

இந்த பிரமாண்டமான முருகன் சிலை உருவாக்கப்பட்டால், இந்த பகுதி பெரிய சுற்றுலாத் தலமாக வாய்ப்புள்ளது என்றும் இந்த பகுதி மிகவும் பிரபலமாகவும், பொருளாதார வளர்ச்சியும் பெறும் என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் கடவுள் முருகனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஓம் முருகா

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *