- அரசியல், தற்போதைய செய்திகள்

அத்திவரதரை தரிசிக்க VIPபாஸ் வேண்டும்! அடம்பிடிக்கும் பெரியார் கோஷ்டிகள்!!

Spread the love

அத்திவரதரை தரிசிக்க VIP பாஸ் வேண்டும்! அடம்பிடிக்கும் பெரியார் கோஷ்டிகள்!!

கடவுள் மறுப்பு ,பகுத்தறிவு, சமுக நீதி என தன்னை அடையாளபடுத்தி கொண்ட திமுக கட்சியின் உறுப்பினர்களின் இரட்டை வேடம் தொடர்ந்து வெளிபட்டு கொண்டே இருக்கிறது.

மற்ற நேரங்களில் பெரியார் கொள்கை மற்றும் கடவுள் மறுப்புகளை பேசி வரும் திமுக தேர்தல் நேரங்களில் மட்டும் பெரியார் கொள்கைகளை மூட்டை கட்டிவிட்டு கோவில் கோவிலாக சென்று வாக்கு சேகரிக்க சென்று விடுவது வழக்கம். தேர்தலுக்கு முன் திருப்பதி எழுமலையானுக்கு சக்தி இருக்கா.? என கேள்வி கேட்ட கனிமொழி கருணநிதி தேர்தல் நேரத்தில் தன் தாயை திருச்சந்தூர் முருகன் கோவிலுக்கு அனுப்பி அதை பிரபலபடுத்தி தான் கடவுள் மறுப்பாளர் கிடையாது என இந்துகள் ஓட்டுக்காக வேடம் போட்டது கடந்த தேர்தல் களத்தில் அரங்கேறியது.

தொடர்ந்து பெரியார் கொள்கைகளை தாங்கி பிடிக்கும் திமுக நடந்து முடிந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்துகளின் எதிர்ப்புகளை புரிந்து கொண்டு திரவிட கழக தலைவர் கி.வீரமணி, சுப.வீரபாண்டியன், திமுக பேச்சாளர் தமிழன் பிரசன்னா ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டால் தோல்வியை தழுவி விடுவோம் என்ற பயத்தில் அவர்களின் பிரச்சாரத்தை முற்றிலும் தவிர்த்தனர்.

மக்களவை தேரதலில் வெற்றி பெற்ற திமுக உறுப்பினர்கள் டில்லியில் பதவி ஏற்கும் போது பெரியார் வாழ்க என கூறி பதவி ஏற்று திமுக கூட்டணி கட்சிக்கு ஓட்டு போட்ட கடவுள் நம்பிக்கையுடைய தமிழக மக்களை ஏமாற்றம் அடைய செய்தனர்.

பதவி ஏற்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் தற்போது அத்திவரதரை தரிசனம் செய்ய VIP பாஸ் கேட்டு திமுக எம்.பி. களும் மற்றும் பல திராவிட கட்சி தலைவர்களும் படையெடுக்க தொடங்கி உள்ளது திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

இது பற்றி காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில் திமுகவினர் கடவுளை வழிபடுவதை யாரும் எதிர்க்கவில்லை எதற்காக யாருக்கும் தெரியாமல் கடவுளை தரிசனம் செய்ய வேண்டும் பெரியார் கொள்கைகளை தூக்கி எறிந்துவிட்டு வெளிப்படையாக கடவுளை தரிசனம் செய்யுங்கள் மக்களும் பாராட்டுவார்கள் என கூறிபிட்டார்.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

1 thought on “அத்திவரதரை தரிசிக்க VIPபாஸ் வேண்டும்! அடம்பிடிக்கும் பெரியார் கோஷ்டிகள்!!

  1. WHETHER THEY ARE THEIST OR ATHEIST, EACH ND EVERY SENSIBLE HUMAN HAS IN HIS DEEP RECESSES OF MIND FEARS THE ALMIGHTY.BUT FOR THE SAKE OF ‘ CHEAPPOLITICALBENEFITS FROM THE OTHER FAITH , THESE PARTY MEN ND LEADERS ARE STAGING THE DRAMA TO HOODWINK THE ALLIES.
    IN NO OTHER FAITH EXISTS ‘ THE DENIAL OF GOD ‘ SECTS.
    THESE ‘ NARROWMINDED ‘ FAKE POLITICAL PERSONS ARE READY TO ACCEPT OTHER FAITHS ‘ RITUSLS ND FESTIVALS.BUT WHEN ITS A QUESTION OF HINDUISM THEY WEAR A MASK FOR OTHER FAITHS’ VOTES.
    SUCH SPINELESS CREATURES NEVER EXIT ANYWHERE EXCEPT IN T.N ND PONDY.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *