- ஆன்மீக சுற்றுலா, தற்போதைய செய்திகள், திருவிழாக்கள்

வரதரை தரிசிக்க VIP-யாக இருந்தாலும் 2-கிலோமீட்டர் தூரம் வரிசைல நிற்கனும்!

காஞ்சிபுரம்

வரதராஜ பெருமாள் கோவில் தரிசனம் இன்றோடு 13-வது நாள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்களின் கூட்டம் இரட்டிப்பாகி உள்ளது.

திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் வார விடுமுறையான சனிக்கிழமை என்பதால் பெருமாளுக்கு உகந்த தினம் என்பதை கருத்தில் கொண்டு பக்தர்கள் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் காஞ்சிபுரத்தில் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரூபாய் 500 கட்டணத்தில் விஐபி வரிசையில் கூட இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் காத்திருப்பதாகவும், பொது வரிசையில் செல்பவர்கள் ஐந்து கிலோமீட்டர் தூரம் வரை நின்று கொண்டு காத்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

கடந்த 12 நாட்களில் மட்டும் சுமார் 13 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஓம் நமோ நாராயணா

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *