- slide, ஆன்மீக செய்திகள், தற்போதைய செய்திகள்

VIP -க்களும் இனி ஏழுமலையானை தரிசிக்க வரிசையில் தான் வரனும்!! TTD

VIP-களும் இனி ஏழுமலையானை தரிசிக்க வரிசையில் தான் வரனும்!!

திருமலை திருப்பதியில் VIP-பாஸ் இனி கிடைக்காது!!

திருமலை திருப்பதிக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்று மணிக்கணக்காக, நாள் கணக்காக வரிசையில் நின்று ஏழுமலையானை தரிசித்து விட்டு வருகிறார்கள். 

ஆனால் பணம் படைத்த ஒருசிலர் கணிசமான தொகையை செலுத்தி VIP பாஸ் என்ற பெயரில் குறுக்கு வழியில் எளிதாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வருகிறார்கள். 

சாமி கும்பிடுவதில் கூட ஏழைக்கு ஒரு சலுகை, பணமிருப்பவருக்கு ஒரு சலுகையா என பொதுமக்களின் குமுறல் தொடர்ந்தது மேலும். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரிபவர்கள், அவர்கள் உறவினர்கள் என பலர் இந்த VIP பாஸை தங்கள் சுய தேவைக்கு பயன்படுத்திக் கொள்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் TTD அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் இனி விஐபி தரிசனம் கிடையாது எனவும் விவிஐபி தரிசனம் ஆண்டுக்கு 1 முறை மட்டுமே செய்ய முடியும் எனவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ஆண்டு தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக புரட்டாசி மற்றும் மார்கழி மாதங்களில் மட்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இது போன்ற சமயங்களில் விஐபி மற்றும் விவிஐபி தரிசனம் என்ற பெயரில் அரசியல்வாதிகள் மற்றும் அரசுத்துறை சார்ந்தவர்கள் தரிசனத்திற்கு வரும் போது பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது .

சில நேரங்களில் தரிசனத்திற்கு 3 நாட்களுக்கு மேல் கூட ஆகும் நிலை உருவாகும். இதற்கு தீர்வு காணும் விதமாக TTD விஐபி தரிசனத்தை முற்றிலும் நீக்கியுள்ளது.

இதில் விவிஐபி அனுமதியை L1, L2, L3 என பிரித்திருக்கிறார்கள். அதன்படி

L1 – நீதிபதிகள், மத்திய உயர்குழு உறுப்பினர்கள், முக்கியமான அரசியல் தலைவர்கள்

L2 – திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் குடும்பம், மற்றும் அரசு அதிகாரிகள்

L3 – அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர்அதிகாரிகளின் சிபாரிசு கடிதம் பெற்றவர்கள்

என்று மூன்று வகையான பிரிவில் மட்டும் அனுமதி வழங்கப்படும். ஒரு அனுமதி சீட்டுக்கு 500 ரூபாய் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பாமர பொதுமக்களிடையே தற்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *