- slide, தற்போதைய செய்திகள், திருவிழாக்கள்

அத்திகிரி வரதர் தரிசன நேரம் மாற்றியமைக்கப் பட்டுள்ளது!!

காஞ்சிபுரம்

வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திகிரி வரதரை, வருகிற 11ஆம் தேதிவரை காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களில் சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.

இந்நிலையில், அத்திவரதரை தரிசனம் செய்யும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. வருகிற 11ஆம் தேதி வரை அத்திவரதரை காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பக்தர்கள் அத்திகிரி வரதரை தரிசனம் செய்ய முடியும்.

வரதராஜபெருமாள் கோவிலில், வசந்த உற்சவம், ஆணி கருட சேவை நடப்பதால், அத்திவரதர் தரிசன நேரத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வருகிற 12ஆம் தேதி முதல் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை வழக்கம்போல் அத்திவரதரை தரிசனம் செய்யலாம்.

அத்திவரதரை தரிசனம் செய்வதற்கான 500 ரூபாய் கட்டண தரிசனம் தொடங்கப்பட உள்ளது. இதற்கு இந்து சமய அறநிலையத்துறை இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *