- slide, தற்போதைய செய்திகள், புண்ணிய தலங்கள்

தஞ்சை பெரிய கோயில், -வரலாற்று சிறப்புமிக்க தகவல்கள்!!

தஞ்சை பெரிய கோயில், – பலரும் அறிந்திராத வரலாற்று சிறப்புமிக்க தகவல்கள்!!

தஞ்சைப் பெருவுடையார் கோயிலானது பிரகதீஸ்வரர் கோயில் என்றும் தஞ்சை பெரிய கோயில் தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப்புகழ் பாரம்பரியச் சின்னம் ஆகும்.

10-ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டது.

இந்த கோயிலானது ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இந்தகோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிரகதீஸ்வரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில் எனவும் அழைக்கப்படுகிறது.

இக்கோயில் கட்டப்பட்ட காலம், சோழராட்சியின் பொற்காலமாக கருதப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் ஒரே குடைக்கீழ் இருந்ததுடன், எல்லைக்கப்பாலும் பல இடங்கள் சோழப் பேரரசின் கீழ் இருந்துள்ளது, பெருமளவு வருவாயும் கிடைத்தது.

இதுபோக பெருமளவு ஆள்பலமும், அரசனின் சிவபக்தியோடு கூடிய ஆளுமையும், இத்தகைய ஒரு பிரம்மாண்டமான கோயிலை சுமார் 10- ஆண்டுகளில் கட்டிமுடிப்பதற்குத் துணையாக இருந்தது.

இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இந்த ஆலயம் 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

இந்த கோயில் தமிழர்களின் கட்டிடகலைக்கு பெருமை சேர்க்கிறது.
1002ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 -வயது பூர்த்தியாகின்றது.

தமிழனின் கட்டிகலைக்கு இதை விட ஒரு உதாரணம் தேவையா…
கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோவில்…

இவ்வளவு அரிதான பொக்கிஷத்தை நமக்கு விட்டு சென்ற நம் முன்னோர்களை போற்றி வணங்குவோம்.

ஓம் நமசிவாய

.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *