- ஆன்மீக செய்திகள், புண்ணிய தலங்கள்

பழுதடைந்த கோயிலை பராமரிக்க பணம் தேவையில்லை மனம் போதும் -இராமஇரவிக்குமார்

Spread the love

பழுதடைந்த கோயிலை பராமரிக்க பணம் தேவையில்லை மனம் போதும் என்று நிருபித்து காட்டிய இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர்- திரு. இராமஇரவிக்குமார்

கள்ளக்குறிச்சி மாவட்டம்
வீரசோழபுரம்
அருள்மிகு நகரீஸ்வரர் (எ)அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் உழவாரப்பணி!

“சொல்லில் அல்ல செயலில் …..!!”

கள்ளக்குறிச்சி மாவட்டம்
வீரசோழபுரம்
அருள்மிகு “நகரீஸ்வரர்”என்ற அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் சோழர் காலத்திய சம்பந்தம் உடையது.
மிகுந்த சிதிலமான நிலையில் கோபுரங்கள் பாழடைந்து கல் மண்டபங்கள் சரிந்து மிகவும் மனவேதனை அடையும் படியான சூழ்நிலையில் இருந்தது

.இந்த நிலையில்
சென்னை தொண்டர் உழவாரம்திருக்கூட்டம் தலைவர்அன்புச் சகோதரர் சிவனடியார் பாலா ஐயா அவர்கள் உள்ளிட்ட அடியார் பெருமக்கள் உடன் சென்று உழவாரப் பணியை மேற்கொண்டோம்.

நெருஞ்சி முட்கள் நிறைந்ததாக இருந்தாலும் பொருட்படுத்தாது கடும் வெயிலில் உழவாரப் பணியில் ஈடுபட்டோம்.

பின்னர்
அருள்மிகு நகரீஸ்வரர் பெருமானிடம்அபிஷேகம் அலங்காரம் நிறைவுற்ற பிறகு இந்த திருக்கோயில் கும்பாபிஷேக பணி விரைவில் நடைபெற வேண்டும் அதற்கு இடையூறாக இருக்கக் கூடிய தடைகள் விலக வேண்டும் என்று திருமுறைகள் பாடி விண்ணப்பம் செய்தோம் இறைவன் திருமேனி தலையில் இருந்த வில்வ இலை தானே சரிந்துநல்ல உத்தரவு கொடுத்தது.

பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தக் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் கோயிலுக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

மற்ற தேவைகளுக்கு பயன்படுத்துவது
அறவிரோதம்.

கோவில் சிதிலமடைந்து இருக்கக் கூடிய சூழ்நிலைகள் கோயிலுக்கு சொந்தமான சொத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் கட்டுவதற்கு எடுத்திருப்பது சட்டவிரோதம் அது கூடாது.
இதற்காக 28 10 2020 அன்று இந்து தமிழர் கட்சியின் சார்பில் நிறுவினர்
ராம ரவிக்குமார்,,
ஆன்மீக இந்துமத கட்சியின்தலைவர் திரு ஜெயம் எஸ் .கே. கோபி ஆகியோர் மனு அளித்து இருந்தோம்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற உழவாரப்பணி மனதிற்கு பெரும் மகிழ்ச்சி தந்தது விரைவில் இந்த ஊரில் இருக்கக்கூடிய அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து கோவில் வழிபாட்டில் ஈடுபடுத்துவதற்கு முயற்சிப்பது என்றும்,.
“1008-ஆயிரத்தி எட்டு”
அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

சோழர்களின் வரலாற்றுடன் தொடர்புடைய இந்த புண்ணிய க்ஷேத்திரம் விரைவில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கும்.

அதற்கான சிவனடியார்கள் இறைநம்பிக்கையாளர்கள் மற்றும் நல்லோர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து இந்த பணியை முன்னெடுத்துச் செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

சொல்லில் அல்ல
செயலில்……!!

இடிந்த கோயிலை கட்டி எழுப்பி வரலாற்று சிறப்புகளை பாதுகாத்திடுவோம்.

நம் தமிழர்களின் பெருமையை பாதுகாத்திட இந்து தமிழர்களாய் ஒன்றிணைந்து வென்று காட்டுவோம்!

இராமஇரவிக்குமார்

இந்துதமிழர்கட்சி

நிறுவனதலைவர்

9655365696
8643081430

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *