அத்திவெட்டி ஸ்ரீ சவுந்தர்யேஸ்வரர் சிவன் கோவில்..
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
தஞ்சை மாவட்டம் மதுக்கூர்-முத்துப்பேட்டை சாலையில் விக்கிரமம் என்னும் கிராமத்திற்கு தெற்கே 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அத்திவெட்டி என்னும் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமையான சவுந்தரேஸ்வரர் சிவாலயம்.. சோழர் தேசமல்லவா? ஆம் சோழர்கால கட்டடக் கலை தான்…சுவாமி கோவில் மட்டும் பிரஸ்தரம் வரை கற்றளியாக உள்ளது. கழுத்து, விமானம் ஆகியவை செங்கல் கட்டட அமைப்பு.மற்ற சன்னதிகள் செங்கல் கட்டுமானம். கோவில் மிகவும் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கற் தூண்கள் அங்கங்கே சிதறிக் கிடக்கின்றன. மூலவர் சவுந்தரேஸ்வரர் லிங்கத் திருமேனியாக வெளியில் ஒரு ஆஸ்பெட்டாஸ் கொட்டகையில், ஒரு நேர பூஜை கூட இல்லாமல் அருள்பாலிக்கிறார்..
விடையமர்ந்து வெண் மழு ஒன்று எந்தி விரிந்திலங்கு சடையொடுங்க தண்புனல் தாங்கியவன் நிலை கண்டால் நெஞ்சம் கனக்கிறது 😭
சிவ சிவ
இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.