- ஆன்மீக செய்திகள், தற்போதைய செய்திகள்

நீங்க தமிழன் தானே! அப்போ இவரு தான் உங்க தமிழ்கடவுள்! கும்பிட வாங்க!

Spread the love

நீங்க தமிழன் தானே! அப்போ இவரு தான் உங்க தமிழ்கடவுள் முருகன்! கும்பிட வாங்க! என்று நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் பக்தர்களை அழைத்ததால் பரபரப்பு

இது தான் முருகன்! யாரோ ஒருவரை காண்பித்து பிரச்சாரம் செய்த நாம் தமிழர் கிருஸ்துவ தம்பிகள் விரட்டியடிப்பு! சென்னையில் பரபரப்பு!

சென்னை சைதாப்பேட்டை சுப்பிரமணிய சுவாமி தெருவில் உள்ள முருகன் கோவில் முன்பு தலையில் முண்டாசு கட்டியது போல் ஒரு படத்தை வைத்து, இதுதான் முருகன், இதை கும்பிட வாருங்கள் என்று பக்தர்களை நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் சூழ்ந்து கொண்டு இந்த புகைப்படத்தில் இருப்பது யார் என்று பொதுமக்கள் கேட்டனர்.

அதற்கு இவர் தமிழர்களின் கடவுள் என நாம் தமிழர் தம்பிகள் விளக்கம் அளித்தனர். அதற்கு அங்கே ஒருவர் உங்களுக்கு கந்த புராணம் தெரியுமா என கேட்க; அதற்க்கு நாம் தமிழர் தம்பி ஒருவர், நான் கிறிஸ்டியன் எனக்கு அது பற்றி தெரியாது என விளக்கம் அளித்தான். இதனால் ஆத்திரம் அடைந்த பக்தர்கள், கிறிஸ்துவன் நீ எதற்காக இந்துக்கள் வழிபடும் முருகன் கடவுளின் உருவத்தை மாற்றுகிறாய் என ஆவேசமாக கேட்க அந்த இடத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதனை அடுத்து அந்த நாம் தமிழர் கிருஸ்துவ தம்பி, எங்க அண்ணன் சீமான், இது தான் தமிழ் கடவுள் முருகன் என்று சொல்லியிருக்கார் என சொல்ல. இதற்கு கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர், உங்க அண்ணன் என்ன பெரிய ஆராய்ச்சி ஆய்வாளரா என கேட்டுள்ளார். மேலும் கோவில் உள்ளே வழிபாடு செய்ய அந்த நாம் தமிழர் கிருஸ்துவ தம்பியை அழைத்துள்ளார். இதற்கு அந்த தம்பி, தான் ஒரு கிறிஸ்துவர், அதனால் ஹிந்து கோவில் உள்ளே சென்று வழிபட முடியாது என மறுத்துள்ளார்.

இதனால் இந்துக்கள் வழிபடும் கோவில் முன்னே கிறிஸ்துவர் உனக்கு என்ன வேலை என பக்தர்கள் சூழ்ந்து கொண்டனர். இதில் சில பக்தர்கள் நாம் தமிழர் கட்சியினரை அடிக்க பாய்ந்துள்ளார், மற்ற பக்தர்கள் அவர்களை தடுத்தனர். நிலைமை மோசமானதால் காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து நாம் தமிழர் கட்சியினரை பாதுகாப்பாக அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *