- slide, அரசியல், தற்போதைய செய்திகள்

ஊருக்கு தான் உபதேசம்! ஸ்டாலின் மனைவி அத்திவரதரை தரிசனம் செய்தார்!

ஊருக்கு தான் உபதேசம்! ஸ்டாலின் மனைவி அத்திவரதரை தரிசனம் செய்தார்!

காஞ்சிபுரம்

வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் அத்திவரதர் தரிசன திருவிழா  கடந்த 1 ஆம் தேதி மக்கள் பார்வைக்காக கோலகலமாக தொடங்கியது. கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அத்திவரதர் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். முதல் 30 நாட்களுக்கு சயன கோலத்திலும், அடுத்த 18 நாட்கள் நின்ற கோலத்திலும் மக்களுக்கு அருள் பாலிப்பார் அத்திகிரி வரதர். 

அத்திகிரி வரதர் திருவிழாவையொட்டி , தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் இதுவரை 8லட்சத்திற்கும் மேற்பட்டோர் அத்திகிரி வரதரை தரிசனம் செய்துள்ளார். இன்னும் ஏராளமானோர் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

8 ஆவது நாளான இன்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அத்திகிரி வரதரை தரிசித்தார்கள். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று மாலை காஞ்சிபுரம் வரதாஜப் பெருமாள் கோவிலுக்கு வந்தார்.

அவரை கோவில் அர்ச்சகர்கள் வரவேற்றனர். பின்னர் அவர் அதிரிகிர வரதரை தரிசனம் செய்தார். விஐபிக்களுக்கான சிறப்பு வழியில் வந்து தரிசனம் செய்துவிட்டு பயபக்தியுடன் மலர்சரம் பெற்றுச் சென்றார் துர்கா ஸ்டாலின்.

ஓம் நமோ நாராயணா.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *