- ஆன்மீக செய்திகள், தற்போதைய செய்திகள்

தென்னிந்தியாவின் வைகுண்டத்தில் பெருமாளின் நகையை திருடிய பூசாரி! 27 ஆண்டு கழித்து தண்டனை!

Spread the love

தென்னிந்தியாவின் வைகுண்டத்தில் பெருமாளின் நகையை திருடிய பூசாரி! 27 ஆண்டு கழித்து தண்டனை!

தென்னிந்தியாவின் வைகுண்டம்
திருவட்டாறு.

திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் தங்க நகைகள் கொள்ளை 27 ஆண்டு வழக்கு 24 பேருக்கு ஜெயில் தண்டனை தெய்வம் நின்று கொல்லும் !

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்று திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில். 1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் பெருமாள் அனந்த சயனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 108 வைணவ திருத்தலங்களில் 76–வது கோயிலாகும். இங்கு மூலவரை மூன்று வாசல்கள் வழியாக தரிசனம் செய்யலாம். அனந்த சயனத்தில் உள்ள பரந்தாமனின் விக்ரகம் தங்கத் தகடுகளால் பொதியப்பட்டிருந்தது.

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு அணிவிக்கப்பட்ட நகைகள் படிப்படியாக கொள்ளையடிக்கப்பட்டதாக கடந்த 1989-ம் ஆண்டு புகார் எழுந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்தக்கோரி பொதுமக்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்த 1992-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இதனையடுத்து திருவட்டார் போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்கை விசாரித்தனர்.

விசாரணையில், சயன நிலையில் உள்ள பெருமாள் சிலையில் அணிவிக்கப்பட்டு இருந்த 30 பவுன் தங்க பூனூல், தங்க கவச தகடு, வைரக்கிரீடம் போன்றவை திருட்டு போய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது வெளியில் தெரியாமல் இருக்க கோவில் பூசாரிகளும், ஊழியர்களும் தங்க கவசத்திற்கு பதிலாக எண்ணெய் டின் தகட்டின் மீது தங்க முலாம் பூசி சாமி சிலையில் வெட்டி எடுத்த பகுதியில் இணைத்து வைத்திருந்தனர்.

இதேபோல் வைரக்கிரீடத்திற்கு பதிலாக தங்க நிற காகித கிரீடத்தை பெருமாளின் தலையில் பொருத்தப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
சுமார் 15 வருடங்களாக கோவில் சாமி சிலை நகைகள் சிறிது, சிறிதாக கோவில் பூசாரிகள், தேவஸ்தான ஊழியர்கள் சுமார் 6½ கிலோ எடையுள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

கொள்ளையடிக்கப்பட்ட நகையின் அப்போதையை மதிப்பு ரூ.40 லட்சமாகும். இதனையடுத்து கோவில் பூசாரிகள் மற்றும் தேவஸ்தான ஊழியர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில், அவர்களிடம் இருந்து 4¼ கிலோ தங்கத்தை மீட்டனர். இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட கோவிலின் தலைமை பூசாரி கேசவன் போத்தி விசாரணைக்கு முன்பே தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் கொள்ளையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடைய கோவில் குருக்கள், கோவில் ஊழியர்கள் என 34 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நாகர்கோவிலில் உள்ள தலைமை குற்றவியல் கோர்ட்டில் 2010-ம் ஆண்டு வரையே வழக்கு விசாரணை நடந்தது. 2011-ம் ஆண்டு முதல் ஐகோர்ட்டு உத்தரவுபடி இந்த வழக்கு நாகர்கோவில் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது.

குற்றம்சாட்டப்பட்ட 34 பேரில் வழக்கு விசாரணையின் போது இடைப்பட்ட காலங்களில் 10 பேர் இறந்து விட்டனர். திருச்சூரை சேர்ந்த கிருஷ்ணன் நம்பூதிரி என்பவர் மட்டும் இந்த வழக்கில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டார். இதனால் தற்போது 23 பேர் மீது மட்டும் வழக்கு விசாரணை நடந்தது.

வழக்கை 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கிறிஸ்டியன் விசாரித்து வந்தார். 27 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

இதில் குற்றம்சாட்டப்பட்ட 23 பேரையும் குற்றவாளி என தீர்ப்பளித்து அவர்களுக்குரிய தண்டனையை தனித்தனியாக அறிவித்தார்.
திருவட்டாரை சேர்ந்த ஸ்ரீஅய்யப்பன் (வயது 75), கோபாலகிருஷ்ணன் ஆசாரி (77), கோபிநாதன் (86), கிருஷ்ணம்பாள் (75), முத்துக்குமார் (47), முத்துநாயகம் (61), வேலப்பன் நாயர் (73), மாத்தூரை சேர்ந்த சுப்பிரமணியரு(69), தோவாளை மகாராஜ பிள்ளை (80), குலசேகரம் கோபாலகிருஷ்ணன் (79), தச்சநல்லூரை சேர்ந்த சங்கரகுற்றாலம் (88), கண்ணுமாமூடு அப்புகுட்டன் (67), நட்டாலம் குமார் (51), மயிலாடுதுறையை சேர்ந்த முருகப்பன் (77) ஆகிய 14 பேருக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனையும், தனித்தனியாக அபராதமும் விதிக்கப்பட்டது.
திருவட்டாரை சேர்ந்த சுரேந்திரன் (59), ஜனார்த்தனன் போற்றி (66), மணிகண்டன் நாயர் (56), லட்சுமணன் (60), செம்பருத்திவிளை கேசவராஜூ (62), புதுக்கடை அய்யப்பன் ஆசாரி (72), தேங்காப்பட்டணம் ஆறுமுகம் ஆசாரி (69), பூட்டேற்றி அப்பாவு (75), கரமனையை சேர்ந்த முத்துகிருஷ்ணன் ஆசாரி என்ற ராஜய்யப்பன் (62) ஆகிய 9 பேருக்கு 3 வருடம் ஜெயில் தண்டனையும், தனித்தனியாக அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்

திருவட்டார் கோயிலில் 12 கிலோ தங்கம் கொள்ளை.
24 பேருக்கு ஜெயில்.
27 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு.
சட்டங்களில் கடுமை வேண்டும்.

“தெய்வம் நின்று கொல்லும்”

வரலாறு

“தென்னிந்தியாவின் வைகுண்டம்”
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில்..

தெற்கே தலை வைத்து, வடக்கே கால் நீட்டி, மேற்கே பார்த்த நிலையில் 22 அடி நீளத்தில் யோக நித்திரையில் பெருமாள் காட்சி தரும் இக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களுள் ஒன்று.

கோயில் இருக்கும் பகுதியைச் சுற்றி பரளியாறு வட்டமாக ஓடுவதால் திருவட்டாறு எனும் பெயர் பெற்றது.

கோயில் கட்டப்பட்ட காலம் குறித்து சரியான கருத்து இல்லையென்றாலும் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள்.

ஆனாலும் கி.பி 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த நம்மாழ்வார் இக்கோயிலுக்கு மங்களாசனம் பாடி “வாட்டாற்று கேசவன்” என்றழைப்பதன் மூலம் குறைந்த பட்சம் 1200 வருடங்களுக்கு முற்பட்டது இக்கோயில் என்பது தெளிவாகிறது.

தூண்களும், கதவுகளும், மேற்கூரைகளும் மரத்தால் செய்யப்பட்டிருக்க, செம்பு தகடால் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்ட 5 கலசங்கள் விமானத்தை அலங்கரிக்கின்றன.

22 அடி நீளப் பெருமாளை ஒரே வாசல் வழியே தரிசிக்க முடியாது என்பதால் திருத்தலை, திருக்கரம், திருப்பாதம் என மூன்று வாயில்கள் அமைக்கப் பட்டுள்ளன.

பெருமாளின் மேனி கடுசர்க்கரைப் பூச்சால் செய்யப்பட்டிருப்பதால் அபிசேகம் கிடையாது. அருகிலிருக்கும் உற்சவருக்குதான் அபிசேகம்.

சுற்றியோடும் ஆற்றின் நடுவே உள்ள இக்கோயிலில் பூசை செய்பவர்கள் பிராமணர்கள் இல்லை.

வருடத்தின் இரண்டு மாதங்களில் (புரட்டாசி & பங்குனி) 6 நாட்கள் மட்டும் சூரியக் கதிர்கள் கர்ப்பக்கிரகத்தின் உள்ளே விழும் வகையில் கோயில் கட்டப்பட்டுள்ளது.

பிற்காலத்தில் (கி.பி 1604 ல்) கட்டப்பட்ட ஒற்றைக்கல் மண்டபம் ஒரே கல்லில் உருவாக்கப்பட்டது.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *