- slide, அரசியல், தற்போதைய செய்திகள்

மயிலின் வாயில் பூவுக்கு பதிலாக பாம்பை வைத்து மாட்டிய உதவி ஆணையர்!!

மயிலின் வாயில் மலருக்கு பதிலாக பாம்பை வைத்து மாட்டிய உதவி ஆணையர்!!

மயிலாப்பூர்

வாயில் மலரைக் கவ்வியபடி புன்னைவன நாதருக்கு பூஜை செய்யும் பழமையான மயில் சிலைக்கு பதிலாக, வாயில் பாம்பை கவ்வியபடி நிற்கும் மயில் சிலையை மாற்றி வைத்ததால் இந்த சிலை மாற்றல் மோசடி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கபாலீசுவரர் கோவிலில், தான் பணியில் இருந்தபோது, எந்த ஒரு சிலையும் மாற்றப்படவில்லை என்று அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், 15 வருடங்களுக்கு முன்பு புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நிகழ்ச்சி தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலை கபாலீசுவரர் கோவிலில் உள்ள சிற்பங்கள் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை ஆகும். அங்கு 10 ஆம் நூற்றாண்டின் ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன், 13 ஆம் நூற்றாண்டின் மூன்றாம் குலோத்துங்க சோழன் உள்ளிட்டோரது காலத்து கல்வெட்டுக்கள் அந்த கோவிலின் பழமைக்கு சான்றாக இன்றும் உள்ளன.

இந்த நிலையில், கடந்த 2004 ஆம் ஆண்டு அங்குள்ள புன்னைவன நாதர் சன்னதியில் இருந்து பழமையும் தொன்மையும் வாய்ந்த மயில் சிலை, ராகு சிலை, கேது சிலை ஆகியவற்றை அகற்றி விட்டு, புதிதாக மூன்று சிலைகளை பிரதிஷ்டை செய்ததாக புகார் எழுந்தது.

திருச்சியைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் அளித்த புகாரின் பேரில், உச்சநீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், கடந்த ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்.

சிலைமாற்றம் தொடர்பாக அப்போது கோவிலின் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையராக இருந்த திருமகள் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஆணையர் தனபால், தலைமை ஸ்தபதி முத்தையா, அறப்பணி குழு தலைவராக இருந்த டிவிஎஸ் தலைவர் வேணு சீனுவாசன், டிவிஎஸ் மேலாளர் ரங்கநாதன், மேலும் இரு டிவிஎஸ் நிறுவன ஊழியர்கள் முன்ஜாமீன் பெற்றார்கள்.

கைதான உதவி ஆணையர் திருமகள், தான் மயிலை கபாலீசுவரர் கோவில் பொறுப்பில் இருந்த 2002 ஆம் ஆண்டில் இருந்து 2007 ஆம் ஆண்டு வரை ஒரு சிலை கூட மாற்றப்படவில்லை என்று நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார், 2003 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் அந்த கோவிலில் சிலைகள் மாற்றப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி நீதிமன்றத்தில் அபிடவிட்டில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உயர் பொறுப்பில் உள்ள இருவரும் ஒருவருக்கொருவர் முரண்பட்ட அபிடவிட் தாக்கல் செய்துள்ள நிலையில், பழமையும் தொன்மையும் வாய்ந்த மயில், ராகு மற்றும் கேது சிலைகள் அகற்றப்பட்டு, அதற்கு பதில் புதிதாக மயில், ராகு, கேது சிலைகள் 2004 ஆகஸ்ட் 29ந்தேதியன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட நிகழ்ச்சியின் வீடியோ முதன்முதலாக வெளியாகி உள்ளது.

எந்த ஒரு சிலையும் மாற்றப்படவில்லை என்று நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்த கூடுதல் ஆணையர் திருமகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை மறைத்து நீதிமன்றத்தில் பொய்யான அபிடவிட்டை அவர் தாக்கல் செய்திருப்பது இந்த வீடியோ காட்சி மூலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

புதிய சிலைகளின் பிரதிஷ்டைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், காலம் காலமாக கோவிலில் பூஜை செய்து வந்த அர்ச்சகர்களை மாற்றிவிட்டு வேறு கோவிலில் இருந்து அர்ச்சகர்களை கொண்டுவந்து இந்த 3 சிலைகளையும் திருமகள் பிரதிஷ்டை செய்ததாக தற்போது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றது.

ஸ்தபதி முத்தையாவோ சிலையின் லட்சணம் சரியில்லாததால் சிலைகள் மாற்றப்பட்டதாகவும், அகற்றப்பட்ட கல் மயில் சிலை வெறும் 350 ரூபாய் மதிப்புள்ளது தான் என்றும், அது ஒன்றும் பழமையான சிலை அல்ல- வெறும் 350 ஆண்டுகளுக்கு முந்தையது தான் என்றும் நீதிமன்றத்தில் அவர் சாட்சியம் அளித்திருந்தார்.

100 ஆண்டுகள் பழமையானது என்றாலே அவை தொன்மையானது என்று விதி இருக்க, அரசின் முறையான உத்தரவின்றி சிலையை அகற்ற அறிவுறுத்தியது குற்றம் என்று காவல்துறையினர் சுட்டிக் காட்டியுள்ளனர்.

பழமையான மயில் சிலை மாற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கோவிலில் உள்ள மன்னர் காலத்து கல்வெட்டுக்கள் மூலம் அங்குள்ள சிலைகள் அனைத்தும் பழமையானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோ ஆதாரத்தால் நீதிமன்றத்தில் பொய்யாக வாக்குமூலம் அளித்த கூடுதல் ஆணையர் திருமகளுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது..!

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

1 thought on “மயிலின் வாயில் பூவுக்கு பதிலாக பாம்பை வைத்து மாட்டிய உதவி ஆணையர்!!

  1. File the case in the court against that bastard Peter with evidance and he should be punished by law… Christian and Muslims are always blaming and shouting hindus god with bad and nasty words. Hindus never allow at all any more…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *