- slide, ஆன்மீக செய்திகள், தற்போதைய செய்திகள்

சபரிமலை ஆவணி பூஜைக்காக மேல்சாந்தியை தேர்வு செய்த பந்தள பலகர்கள்!

சபரிமலை ஆவணி பூஜைக்காக மேல்சாந்தியை தேர்வு செய்த பந்தள பலகர்கள்!

சபரிமலை

ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது.

நேற்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார்.

தொடர்ந்து தந்திரி கண்டரரு மகஷே் மோகனரரு பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கினார். பின்னர் மேல்சாந்தி 18ம் படி வழியாக சென்று ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்து கோயிலுக்கு திரும்பியதும் பக்தர்கள் 18ம் படி வழியாக வந்து தரிசனம்செய்தனர். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு மகஷே் மோகனரரு அபிஷேகம் நடத்திய பின்னர் நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்து கணபதி ஹோமம் நடத்துவார்.

இன்று(ஆக.,17) காலை புதிய மேல்சாந்தி தேர்வு நடைபெற்றது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு மகஷே் மோகனரரு அபிஷேகம் நடத்திய பின்னர் நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்து கணபதி ஹோமம் நடத்தினார். காலை 7:30 மணிக்கு உஷபூஜைக்கு பின்னர் வரும் கார்த்திகை முதல் தேதி முதல் அடுத்த ஒரு ஆண்டு காலத்துக்கான புதிய மேல்சாந்தி தேர்வு நடைபெற்றது. இதில் சபரிமலை புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரியும், மாளிகைபுறம் மேல்சாந்தியாக பரமேஸ்வரன் நம்பூதிரியும் தேர்வு செய்யப்பட்டனர்.

சபரிமலை மேல்சாந்தியாக நியமிக்கபட்ட சுதீர் நம்பூதிரி

மாளிகைப்புரம் புதிய மேல்சாந்தியாக பரமேஸ்வரன் நம்பூதிரி

இருவரையும் பந்தள அரண்மனையிலிருந்து வந்த குழந்தைகள் ஐயனின் திருபாத சேவைக்கு தேர்ந்தெடுத்தனர்.

பந்தளம் அரண்மனையைச் சேர்ந்த மாதவ் வர்மாவும், காஞ்சனா வர்மாவும் இருமுடிகட்டி சபரிமலைக்கு வந்தனர்.

பின்னர் சபரிமலை மேல்சாந்தியை மாதவ்வர்மா தேர்வு செய்தார், காஞ்சனாவர்மா மாளிகைப்புறம் மேல்சாந்தியை தேர்வு செய்தார்.
இந்நிகழ்வு சன்னிதானம் முன்பு நாளை நடைபெற்றது.

பின்னர் சன்னிதானத்தில் குழந்தைகளுக்கு முதல் உணவு கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பிறகு சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசித்து சென்றனர்.

சுவாமியே சரணம் ஐயப்பா

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

3 thoughts on “சபரிமலை ஆவணி பூஜைக்காக மேல்சாந்தியை தேர்வு செய்த பந்தள பலகர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *