- slide, அரசியல், தற்போதைய செய்திகள், புண்ணிய தலங்கள்

பாகிஸ்தானில் 72 ஆண்டுகள் கழித்து திறக்கப்பட்ட இந்துக் கோயில்!

பாகிஸ்தானில் 72 ஆண்டுகள் கழித்து திறக்கப்பட்ட இந்துக் கோயில்!

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்துக்கு உட்பட்ட சியால்கோட்டில் அமைந்திருக்கும் மிகப் பழமை வாய்ந்த இந்துக் கோயிலானது சுமார் 72 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டதன்பேரில், பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினமான இந்து சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஷவாலா தீஜா சிங் கோயில் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டதக்கது.

இந்து முறைப்படி கோயிலில் பல்வேறு பரிகாரப் பூஜைகள் செய்யப்பட்டு கோயில் திறக்கப்பட்டதாக தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் செய்தி வெளியிட்டது.

இந்த இந்துக் கோயிலைத் திறக்க வேண்டும் என்று பல ஆண்டு காலமாக இந்து சமுதாய மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர் என்று வழிபாட்டுத் தலங்களுக்கான துணைச் செயலர் சயீத் பராஸ் அப்பாஸ் கூறினார்.

இந்து கோயிலை மறுசீரமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இந்தியாவில் இருந்து இந்து மதக் கடவுள் சிலைகள் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்படும்.

இந்தியா – பாகிஸ்தான் நாடு பிரிவினைக்குப் பிறகு மூடப்பட்ட இந்த கோயில், தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உத்தரவின் பேரில் திறக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, சியால்கோட்டில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான குருத்வாரா கோயிலும், இந்திய சீக்கிய பக்தர்கள் உள்ளே நுழைய அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த குருத்வாரா கோயிலுக்குள் பாகிஸ்தானியர்கள் மட்டுமே நுழைய முடியும். இந்திய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *