- ஆன்மீக செய்திகள்

ஒருவேளை பூஜைக்கு கூட வழியின்றி கேட்பாரற்று கிடக்கும் தர்மபுரிஸ்வரர் சிவன் கோயில்!!

Spread the love

ஒருவேளை பூஜைக்கு கூட வழியின்றி கேட்பாரற்று கிடக்கும் தர்மபுரிஸ்வரர் சிவன் கோயில்!!

நாகை மாவட்டம் கூத்தூர் வில்லேஜ் அடுத்து குருகத்தி pincode-611105. தர்மபுரிஸ்வரர் சிவன் கோவில் தன் பலநூற்றாண்டு பழமையை இழந்து அழிந்து வருகிறது.

மீட்பார் யாரும் உண்டோ.

அறநிலைய துறை என்ன செய்கிறதோ.

சிவனடியார்கள் பார்வையில் செல்லும் வரை பகிர்வோம்.

மீட்புக்கு வழி கிடைக்கட்டும்

சமூக ஆர்வலர்களின் கண்களில் இந்த காட்சிகள் படட்டும்

இதை சரிசெய்பவர்களுக்கு சிவன் அருள் நிச்சயம் கிடைக்கும்

ஓம் நமசிவாய

அந்த பகுதியில் உள்ள அன்பர்கள் முயற்சி செய்தால் , நிச்சயமாக கோவில் உயரும் அதை சீர்படுத்த முன்வருபவர்களும் மேன்மை அடைவர்

கோயில் வரலாறு:

சிதலமடைந்த கோயிலுக்குள் தர்மபுரீஸ்வரர்!

மஹாபாரதம் வெறும் காவியமன்று. கலியுகத்தில் வாழும் தர்ம நெறிமுறைகளை விளக்கும் அற்புத நூல். தர்மத்துக்காகத் துணிந்து நின்ற பாண்டவர்களின் வாழ்வைச் சொல்லும் பொக்கிஷம்.

சிதலமடைந்த கோயிலுக்குள் தர்மபுரீஸ்வரர்!

மகாபாரதம் வெறும் காவியமன்று. கலியுகத்தில் வாழும் தர்ம நெறிமுறைகளை விளக்கும் அற்புத நூல். தர்மத்துக்காகத் துணிந்து நின்ற பாண்டவர்களின் வாழ்வைச் சொல்லும் பொக்கிஷம்.

தர்மபுரீஸ்வரர்

பாண்டவர்கள் ஐவரும் தங்களின் யாத்திரையின்போது, பல தலங்களில் வழிபாடு செய்தனர். அப்படி தருமபுத்திரர் சிவபூஜை செய்த தலம் கூத்தூர். இங்கு எழுந்தருளியிருக்கும் சிவலிங்கத்தைத் தருமபுத்திரர் தழுவி வழிபாடு செய்ததால், இந்த ஈசனுக்கு `தர்மபுரீஸ்வரர்’ என்ற திருநாமம் ஏற்பட்டது.

சுமார் 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தத் திருக் கோயில், நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டத்தில் உள்ள கூத்தூரில் அமைந்துள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கீழ்வேளூர் ஸ்ரீஅட்சயலிங்க தேவ ஸ்தானத்துக்குக் கீழுள்ள துணைக்கோயில்களில் இதுவும் ஒன்று. இங்கு ஸ்ரீதர்மபுரீஸ்வரர் மேற்கு நோக்கிச் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறார். இங்கு அன்னையின் திருநாமம் ஸ்ரீதர்மசம்வர்த்தினி. முன்பு அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்திருந்ததாம்.

ஸ்ரீதர்மபுரீஸ்வரருக்கு எதிரே கிழக்கு நோக்கி விநாயகர் அருள்கிறார். தட்சிணாமூர்த்தி, முருகன், சண்டிகேஸ்வரர், சூரிய பகவான் ஆகியோரின் திருமேனிகளும் கோயிலில் காட்சிகொடுக்கின்றன. ஆலயத்தின் தென்புறத்தில் கோயில் தீர்த்தமும், தல விருட்சமாக வில்வமும் அமைந்துள்ளன.

தர்மபுத்திரர் வழிபட்ட இந்த ஆலயம் இன்று மிகவும் மோசமான நிலையில் சிதிலமடைந்துள்ளது. இந்த ஆலயத்தைத் தன்னால் இயன்றவரையிலும் பராமரித்து வரும் இந்த ஊரைச் சேர்ந்த ஆசிரியர் இளங்கோவனிடம் கேட்டோம்.

“ஒரு காலத்தில் ஓங்கி உயர்ந்த மதில்களுடன் புகழ்பெற்று விளங்கியது இந்தக் கோயில். ஆனால் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. ஒரு நிலையில், ஆக்கிரமிப்பாளர்களின் கைகளில் அகப்பட்டு, கேட்பாரற்றுப் போனது. மேற்குப்புற வாசல் முற்றிலுமாய் அடைபட்டுப் போனது.

தற்போது தர்மபுரீஸ்வரரை இக்கிராமத்தில் வசிக்கும், பதின்மூன்று குடும்பங்கள் மட்டுமே வணங்கிவருகிறோம். பல்வேறு போராட்டங்கள், பிரச்னைகளுக்கு மத்தியில் எஞ்சியுள்ள இக்கோயிலை மீட்டெடுத்துள்ளோம்.

அம்பாள் சந்நிதி முற்றிலும் தரைமட்டமாகி விட்டது. எனவே அம்பாள் மற்றும் பிற தெய்வத் திருமேனிகளைத் தர்மபுரீஸ்வரரின் கருவறை மண்டபத்தில் வைத்து பூஜித்து வருகிறோம். இந்த மண்டபமும் மரம், செடி கொடிகளோடு விரிசலடைந்து, எந்நேரமும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. ஆகவே, அங்குள்ள தெய்வத் திருமேனிகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சுகிறோம்.

இந்நிலையிலும் பிரதோஷம், சிவராத்திரி போன்ற விசேஷ நாள்களில் பக்தர்கள் வந்து வழிபடுவதற்கேற்ப எங்களால் இயன்ற திருப்பணி களைச் செய்கிறோம். முக்கியமான நாள்களில் மட்டுமே சிவாசார்யரை வரவழைத்துப் பூஜை செய்கிறோம். இக்கோயிலை மீண்டும் புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்தி, ஸ்ரீதர்மபுரீஸ்வரரின் அனுக்கிரகம் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே எங்களின் பிரார்த்தனை.

உடன்பிறந்தவர்களின் ஒற்றுமைக்கு இலக்கண மாய்த் திகழ்பவர்கள், பஞ்ச பாண்டவர்கள். மூத்தவரான தருமரை தம்பியர் நால்வரும் தெய்வமாக வணங்கி பூஜித்தனர். தர்மர் பூஜித்த இந்த ஈசனை வணங்கி வழிபட்டால், சகோதர சகோதரிகளுக்கு இடையே ஒற்றுமை செழித்து ஓங்கும், குடும்பத்தில் அமைதி நிலவும், உடன்பிறந்தோர் பாசப்பிணைப்புடன் ஒழுக்க நெறிகளுக்குட்பட்டு வாழ்வர், மக்கள் மத்தியில் தர்ம சிந்தனை தழைத்தோங்கும் என்பது ஐதிகம். இத்தகைய பெருமைமிக்க இத்திருக்கோயிலைப் புனரமைக்க பக்தர்களும் பெரியோர்களும் முன்வர வேண்டும்” என்றார்.

ஆலயம் என்பது வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல. அதுவே அறத்தின் பிறப்பிடமும், பண்டைய கலைகளின் உறைவிடமும், பண்டைய பண்பாட்டின் தோற்றுவாயாகவும் திகழ்வது. ஆக, ஆலயங்கள் எனும் பொக்கிஷங்களைப் பராமரிப்பதும் பாதுகாப்பதும் நம் கடமை. தர்ம புரீஸ்வரர் திருக்கோயில் பொலிவு பெறுவதற்கான பணியை முன்னெடுப்போம்; எங்கும் தர்மம் செழிக்க அந்த ஈசனின் அருளை வேண்டுவோம்.

கோயிலுக்கு செல்லும் வழி:-

நாகை – திருவாரூர் பேருந்து மார்க்கத்தில், நாகையிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள குருக்கத்தியில் இறங்கவேண்டும்.நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டத்தில் உள்ள கூத்தூரில் அமைந்துள்ளது. கூத்தூர் ரயில்வே ஸ்டேஷன். Pincode: 611105. அங்கிருந்து தெற்கே அரை கி.மீ. தூரத்தில் ஸ்ரீதர்மபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. ஆட்டோ வசதியுண்டு.

உதவி செய்ய நினைப்பவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.

விரைவில் கும்பாபிஷேகம் காண வாழ்த்துக்கள்

ஓம் நமசிவாய:

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

12 thoughts on “ஒருவேளை பூஜைக்கு கூட வழியின்றி கேட்பாரற்று கிடக்கும் தர்மபுரிஸ்வரர் சிவன் கோயில்!!

  1. Thank you for your post. Can you please give the details of the Gurukal who is maintaining it or anyone near the temple please ? Kindly reply

  2. Hi, thanks for the post. Can you please give the details of who is willing to improve this temple and also gurukkal details.

  3. ஊர் pincode இருந்தால் சொல்லுங்கள் அல்லது மிக சரியான வழியை சொல்லுங்கள். 9176231971 இந்த எண்ணில் அழைக்கவும்

  4. I am ready to do the Kaingaryam.pl contact me in 8762386458. Pl provide me with the details.Thamks in advance. Ohm Namashivaya

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *