- அரசியல், ஆன்மீக செய்திகள், தற்போதைய செய்திகள்

நவபாஷாணத்தால் செய்யப்பட்ட மீனாட்சி, பெருமாள் சிலைகள் மாயம்! குடிசையில் உற்ஸவர்!?

Spread the love

நவபாஷாணத்தால் செய்யப்பட்ட மீனாட்சி, பெருமாள் சிலைகள் மாயம்! குடிசையில் உற்ஸவர்!?

திருமங்கலம்:

திருமங்கலம் அருகே சவுடார்பட்டியில் முறையான பராமரிப்பின்றி சிதிலமடைந்து வரும் பழமை வாய்ந்த மீனாட்சி அம்மன் கோயிலை இந்துசமய அறநிலையத்துறை சீரமைக்க முன்வர வேண்டும்.

இக்கோயிலில் 15 ஆண்டுகளாக தூண்கள், சுவர்கள் சேதமடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. கோயில் இடியும் அபாயமும் அதிகமாக உள்ளது.

பாதுகாப்பு குறைவான இக்கோயிலில் நவபாஷாணத்தால் செய்யப்பட்ட மீனாட்சி, பெருமாள் சிலைகள் சில ஆண்டுகளுக்கு முன் மாயமாயின. மேலும் மீனாட்சி அம்மன், பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் உற்ஸவர் சிலைகள் பாதுகாப்பு கருதி கோயிலிருந்து எடுத்து செல்லப்பட்டு கோயில் குடிசை வீட்டில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சிலைகள் மாயமானதாக எழுந்த தகவலையடுத்து கோயில் குடிசை வீட்டில் இருந்த சிலைகளை இந்துசமய அறநிலையத்துறையினர் சமீபத்தில் பார்வையிட்டனர்.

சேதமடைந்த இக்கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் நிலங்கள், சொத்துக்களை மீட்க வேண்டும் என கிராமத்தினர் ஊர் பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

காணாமல் போன நாவபாஷண சிலைகளையும் மீட்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த சிலை கடத்தலை ஐயா பொன் மாணிக்கவேல் கவனத்திற்கு கொண்டு சென்று மயமான சிலைகளை மீட்டு கொண்டு வர வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *