நரசிம்மரின் இந்த மஹாமந்திரத்தை உச்சரித்தால் வாழ்க்கையில் நீங்கா துன்பங்களும் நீங்கும் ஆனால் உண்மையான நம்பிக்கையோடு நரசிம்மரை வழிபடுவது மிகவும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
நரசிம்மரின் மஹாமந்திரம்:
“உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் தம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்”
பொருள்:
கோபம், வீரம், தேஜஸ், (பிரகாசம்) கொண்ட மகாவிஷ்ணுவின் அவதாரமான நரசிம்மரே! எல்லா திசைகளையும் பார்த்து கொண்டிருக்கும் உன்னிடமிருந்து தவறு செய்பவர்கள் யாராலும் தப்பிக்க முடியாது.
எதிரிகளுக்கு பயத்தையும், மரணத்திற்கே மரணத்தையும் காட்டி எல்லாமும் நீயாக இருக்கின்றாய். உன்னை மனமார வணங்குகின்றேன்.