- ஆன்மீக அறிவியல், தற்போதைய செய்திகள்

நம:பார்வதீ பதயே! ஹரஹர மஹாதேவா! என்பது ஏன் ?

Spread the love

நம: பார்வதீ பதயே என்பது ஏன் ?

சிவன் கோயில்களில் “நம:பார்வதீபதயே’ என ஒருவர் சொல்ல, “ஹரஹர மகாதேவா’ என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இதன் பொருள் என்ன?

பார்வதிதேவிக்கு பதியாக (கணவராக) இருப்பவர் பரமசிவன். “பார்வதீபதி’ என்கிற அவரே உலகுக்கெல்லாம் தந்தை. தேவர்களுக்கெல்லாம் அதிபதி என்பதால் அவருக்கு “மகாதேவன்’ என்று பெயர்.

பூலோகத்தில் ஒரு குழந்தை அவரை “ஹர ஹர’ என்று சொல்லி ஓயாமல் வழிபட்டு வந்தது. அந்தக் குழந்தையே அன்னை உமாதேவியிடம் ஞானப்பாலுண்ட “திருஞானசம்பந்தர்”. இவர் ஊர் ஊராக “ஹர ஹர” நாமத்தைச் சொல்லிக் கொண்டு போவதைப் பார்த்து, எல்லா ஜனங்களும் “அரோஹரா” என்று கோஷம் போட்டார்கள். அந்த கோஷமத்தைக் கேட்டதும், உலகத்தில் இருந்த கெட்டதெல்லாம் உடனடியாக அழிந்துவிட்டது. அதாவது உலகத்தில் துயரமே இல்லாமல் போனது. “என்றைக்கும் இதே மாதிரி ஹர ஹர சப்தம் எழுப்பிக் கொண்டே இருக்கட்டும்! அதனால், உலகத்தின் கஷ்டங்கள் எல்லாம் போகட்டும்,” என்று திருஞானசம்பந்தர் தேவாரம் பாடினார்

“அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே” என்றார். அரன் என்றால் சிவன்.

இப்போது “நம: பார்வதீபதயே!” என்று ஒரு பெரியவர் சொல்ல, உடனே அனைவரும் அம்மையான பார்வதியையும் அவர் பதியான நம் அப்பா பரமசிவனையும் நினைத்துக் கொண்டு அன்றைக்கு திருஞானசம்பந்தர் சொன்ன மாதிரியே பக்தியோடு “”ஹர ஹர மகாதேவா” என்று சொல்வார்கள். ” நம: பார்வதீ பதயே! கூட்டத்தில் உரக்கச் சொல்ல வெட்கப்படாமல், நன்றாக வாய்விட்டு சொல்ல வேண்டும். மறுபடியும்
நம:பார்வதீ பதயே!
“ஹர ஹர மகாதேவா”.

இப்படி வாய்விட்டு சொல்லி, அம்மையப்பனைத் துதித்து, அனைவரும் நலமாக இருக்க வேண்டும்.

ஓம் நமசிவாய

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *