- ஆன்மீக செய்திகள், தற்போதைய செய்திகள்

700-ஆண்டு பழமையான நடராஜர் சிலையை ஆஸி. மீட்டு வந்த பொன் மணிக்கவேல் குழு!

Spread the love

ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்ட நடராஜர் மீண்டும் தமிழகம் வருகிறது!!

தமிழகத்திலிருந்து கடத்தி செல்லப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவிலிருந்து எடுத்து வரப்படுகிறது.


சிட்னி:

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழகத்திற்கு சொந்தமான 16 ம் நூற்றாண்டிற்கு உட்பட்ட நடராஜர் சிலையானது நாளை (செப்டம்பர்.10) தமிழகம் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை :

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டு உள்ள, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள, பஞ்சலோக நடராஜர் சிலை, நாளை, சென்னை வருகிறது. 

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக் குறிச்சியில், அறம்வளர்த்தநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 1982ல், 30 கோடி ரூபாய் மதிப்புள்ள, பஞ்சலோக நடராஜர் சிலை மற்றும் சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர், திருவில்லி விநாயகர் சிலைகள் திருடு போயின. இது குறித்து, திருநெல்வேலி மாவட்ட போலீசார் விசாரித்தனர்; துப்பு துலக்க முடியவில்லை. இதனால், 1984ல், கண்டுபிடிக்க முடியாத வழக்கு பட்டியலில் சேர்த்து விட்டனர். இந்த வழக்கை, தற்போது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, சிறப்பு அதிகாரி, பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரித்தனர்

நடராஜர் சிலை, ஆஸ்திரேலியாவில் இருப்பதை கண்டறிந்து, அந்த சிலையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தற்போது, நடராஜர் சிலை மீட்கப்பட்டு, விமானம் வாயிலாக, டில்லிக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.அங்கிருந்து, நாளை ரயிலில், சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வருகிறது. பின், இந்த சிலை, கல்லிடைக்குறிச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

700 ஆண்டுகள் பழமையான சிலை மீட்கப்பட்டுள்ளது. நன்றிகள் கோடி திரு. பொன் மாணிக்கம்வேல் அவர்களுக்கு
வாழ்த்துக்கள்.

ஓம் நமசிவாய.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *