- அரசியல், தற்போதைய செய்திகள்

வெளிநாட்டு பணத்தில் மதம்மாற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு கட்டுபாடு- உள்துறை

Spread the love

வெளிநாட்டு பணத்தில் மதம்மாற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு கட்டுபாடு- உள்துறை

புதுடில்லி:

அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான விதிமுறைகளை, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதன்படி, இவற்றில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், தங்கள் மீது, மத மாற்றத்தில் ஈடுபட்டதாக வழக்குகள் எதுவும் இல்லை என்பதையும், மத மாற்றத்தில் ஈடுபட்டதற்காக தண்டனை எதுவும் பெறவில்லை என்பதையும், உறுதி செய்ய வேண்டும்.

நாடு முழுவதும், ஆயிரக்கணக்கான, அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில், 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான நிதியை பெற்று, மத மாற்றத்தில் ஈடுபடுவது, அரசுக்கு எதிரான போராட்டங்களை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக புகார்கள் கூறப்பட்டு வந்தன. இந்நிலையில், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகளை, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து, உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:
தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நடத்துவோர், அவற்றில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர், மத மாற்றத்தில் ஈடுபட்டதாகவோ, அதனால், சமூக ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவோ, தங்கள் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என அறிவிக்க வேண்டும்

மேலும், மத மாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பான குற்றத்துக்காக, எந்த வழக்கிலும், தண்டனை எதுவும் பெறவில்லை என்றும், வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அதற்கான சான்றிதழையும் அரசுக்கு அளிக்க வேண்டும். இதுவரை, வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்காக, தொண்டு நிறுவனங்களின் இயக்குனர்கள் அந்தஸ்திலான அதிகாரிகள் மட்டுமே இது போன்ற சான்றிதழை அளிக்கும்படி, விதிமுறை இருந்தது. அதில், தற்போது மாற்றம் செய்யப்பட்டு, தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து உறுப்பினர்களும், இதுபோன்ற சான்றிதழை அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், வெளிநாட்டு நிதியை தவறாக பயன்படுத்தி, மத மாற்றம், தேசதுரோக செயல் மற்றும் சமூக நல்லிணக்கத்துக்கு கேடு விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன் என்ற உறுதிமொழியையும், அவர்கள் அளிக்க வேண்டும். 

அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவோர், வெளிநாடுகளுக்கு செல்லும்போது, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டியிருந்தால், அது குறித்து, ஒரு மாதத்துக்குள், மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

சிகிச்சைக்கான நிதி எங்கிருந்து கிடைத்தது, எவ்வளவு செலவாகும், அந்த நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்ற விபரத்தையும் அரசுக்கு தெரிவிக்க வேண்டும். 

இந்த விதிமுறை, ஏற்கனவே அமலில் இருந்தாலும், அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய கால வரையறை, இரண்டு மாதமாக இருந்தது; அது, ஒரு மாதமாக குறைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு உதவி தொடர்பான சட்டத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தனி நபர், வெளிநாடுகளில், தங்களுக்கு கிடைத்த, 1 லட்சம் ரூபாய் வரையிலான பரிசுகளை பற்றி, அரசுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே இருந்த சட்டப்படி, 25 லட்சம் ரூபாய்க்கு அதிகமான பரிசுகள் பற்றிய விபரங்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *