- slide, ஆன்மீக சுற்றுலா, தற்போதைய செய்திகள், புண்ணிய தலங்கள்

தென்னிந்தியாவின் வைகுண்டம் – குமரி வாட்டாற்று கேசவன்!!!

தென்னிந்தியாவின் வைகுண்டம் – கன்னியாகுமரி வட்டாற்று கேசவன்.

தென்னிந்தியாவின் வைகுண்டம்”
என்று அழைக்கப்படும் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில்..

இக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களுள் ஒன்று.
தெற்கே தலை வைத்து, வடக்கே கால் நீட்டி, மேற்கே பார்த்த நிலையில் 22 அடி நீளத்தில் யோக நித்திரையில் பெருமாள் காட்சி தரும் கோயில்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. கோயில் இருக்கும் பகுதியைச் சுற்றி பரளியாறு வட்டமாக ஓடுவதால் திருவட்டாறு என்று அழைக்கப்படுகிறது.

கோயில் கட்டப்பட்ட காலம் குறித்து சரியான கருத்து இல்லையென்றாலும் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள்‌ கூறுகின்றனர்.

ஆனாலும் கி.பி 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த நம்மாழ்வார் இக்கோயிலுக்கு மங்களாசனம் பாடி “வாட்டாற்று கேசவன்” என்றழைப்பதன் மூலம் குறைந்த பட்சம் 1200 வருடங்களுக்கு முற்பட்டது இக்கோயில் என்பது தெளிவாக உள்ளது.

தூண்களும், கதவுகளும், மேற்கூரைகளும் மரத்தால் செய்யப்பட்டிருக்க, செம்பு தகடால் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்ட 5 கலசங்கள் விமானத்தை அலங்கரிக்கிறது.

22 அடி நீளப் பெருமாளை ஒரே வாசல் வழியே தரிசிக்க முடியாது என்பதால் திருத்தலை, திருக்கரம், திருப்பாதம் என மூன்று வாயில்கள் அமைக்கப் பட்டு தரிசனம் செய்யப்படுகிறது.

பெருமாளின் மேனி கடுசர்க்கரைப் பூச்சால் செய்யப்பட்டிருப்பதால் அபிஷேகம் கிடையாது. அருகிலிருக்கும் உற்சவருக்குதான் தினமும் அபிஷேகம் நடைபெறும்.

அருகில் இருக்கும் நரசிம்மர் கோயிலில் வழிபாடு முடிந்த பிறகே இங்கு வழிபாடு தொடங்கும்

வருடத்தின் இரண்டு மாதங்களில் (புரட்டாசி & பங்குனி) 6 நாட்கள் மட்டும் சூரியக் கதிர்கள் கர்ப்பக்கிரகத்தின் உள்ளே விழும் வகையில் கோயில் வடிவமைப்பு உங்ளது.

பிற்காலத்தில் (கி.பி 1604 ல்) கட்டப்பட்ட ஒற்றைக்கல் மண்டபம் ஒரே கல்லில் உருவாக்கப்பட்டது.

இந்த கோயில் நாகர்கோயிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் உள்ளது.

.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *