- ஆன்மீக சுற்றுலா, தற்போதைய செய்திகள், புண்ணிய தலங்கள்

இந்துக்கள் அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது செல்லக்கூடிய தலம்!!

Spread the love

மானிட பிறப்பெடுத்த அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது செல்லக்கூடிய முக்கிய தலங்கள்

1.காசி ,
2.இராமேஸ்வரம்
மிக முக்கியமானதாகும்.

முதலில் நாம் காசிக்கு சென்று வந்தால் அவசியம் இராமேஸ்வரமும் செல்ல வேண்டும், அல்லது முதலில் இராமேஸ்வரம் சென்று வந்தால் கூடவே காசிக்கும் நிச்சயமாக போக வேண்டும் என்பார்கள்.

இராமேஸ்வரம், காசி சென்றால் தான் இந்துக்களின் புனித பயணம் முழுமை பெறும் என்பது இந்துக்களிடையே உள்ள நம்பிக்கை.

காசிக்கு வயதானதவர்கள் மட்டும் செல்ல வேண்டும் என்றெல்லாம் இல்லை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் புனித யாத்திரை செல்லலாம்.

காசிக்கு சென்றால் அவசியம் திருவேணி சங்கமம் அதாவது முக்கூடல்
1.கங்கை
2.யமுனை
3.சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் ஒன்றாக சேரும் இடத்திற்கு செல்ல வேண்டும்.

அங்கு செல்வதற்கு படகுகள் இயக்கப்படுகின்றன். அவ்விடத்தில் சிறிது நீரை எடுத்து கொண்டு வந்து இல்லங்களில் வைத்து கொள்ளலாம்.

இராமேஸ்வரம் சென்றால் அவசியம் அங்குள்ள அலை வராத புனித கடலாம் அக்னி தீர்த்ததில் நீராடி பின் கோவினுள் உள்ள அனைத்து தீர்த்த கிணற்றில் உள்ள நீரில் நீராட வேண்டும். அங்கேய நீர் இரைத்து ஊற்றுபவர் இருப்பார்.

காசிக்கும் இராமேஸ்வரத்திற்கும் மிக முக்கியமான ஒரு ஒற்றுமை உள்ளது.

என்னவென்றால் ,
இராவணனை கொன்றதால் பிரம்மஹஸ்தி தோஷம் இராமனை பிடித்து கொண்டது .

இதிலிருந்து விடுபட இராமன் இராமேஸ்வரத்தில் சீதையால் மணலால் செய்யபட்ட லிங்கத்திற்கு

ஓம்சிவாயநமஹ:
ஓம்சிவலிங்காயநமஹ: ஓம்ஆத்மாயநமஹ: ஓம்ஆத்ம_லிங்காயநமஹ:
ஓம்சர்வாயநமஹ:
ஓம்சர்வலிங்காயநமஹ: ஓம்பவாயநமஹ: ஓம்பவலிங்காயநமஹ:

என்றெல்லாம் கூறி சிவபெருமானையே நினைத்து பூஜித்து அந்த தோஷங்களில் இருந்து விடுபட்டார்.

இதே போல் காசியிலுள்ள விஸ்வநாதர் நாமங்களிலேயே உயர்ந்த நாமமான “இராம நாமத்தையே” நாளும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதாவது காசியில் சிவன் இராமனையும், இராமேஸ்வரத்தில் இராமன் சிவனையும் பூஜிக்கின்றனர்.

ஹரிஹராயநமஹ.

ராம ராமா
ஓம் நமசிவாய:
ஜெய்ஶ்ரீராம்.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

1 thought on “இந்துக்கள் அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது செல்லக்கூடிய தலம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *