- தற்போதைய செய்திகள், புண்ணிய தலங்கள்

குமரி 12 சிவாலய ஓட்டம் பற்றி பலரும் அறிந்திராத மகத்துவம்!!

Spread the love

குமரி 12 சிவாலய ஓட்டம் பற்றி பலரும் அறிந்திராத அரிய தகவல்கள்!!

கன்னியாகுமரி மாவட்ட ஆலய விழாக்களில் எத்தனையோ சிறப்புகள். அவற்றில் குறிப்பிடத்தக்கது, சரித்திர புகழ் வாய்ந்த சிவாலய ஓட்டம் ஆகும்.

மாசி மாதத்தில் வரும் அதிபுராதன புண்ணியமான மஹாசிவ ராத்திரி அன்று விரதசுத்தியோடு பன்னிரண்டு சிவாலயங்களை ஓட்டமாக ஓடிச் சென்றே தரிசிப்பதுதான் இந்த வழிபாட்டின் தனிச் சிறப்பு. அதாவது 24 மணி நேரத்தில், சுமார் 110 கி.மீ. தொலைவுக்குட்பட்ட பன்னிரண்டு சிவாலங்களிலும் வீற்றிருக்கும் ஈசனை தரிசிப்பது ஆகும். இந்தக் கோயில்கள் அனைத்தையும் உரிய நேரத்தில் தரிசிக்க வேண்டிய காலம் கருதியே ஓட்டம்!

இந்த சிவாலய ஓட்டம் எப்படி ஆரம்பித்தது? வரலாறானது…
புருஷாமிருகம் தலை மனித உருவமும், மீதி உடம்பு புலி உருவமாக அமைந்த ஒரு பிறவி. ஆழ்ந்த சிவபக்தர் மஹாரிஷி. சிவனைத் தவிர, வேறு இறைவனை ஏற்கமாட்டார். விஷ்ணு நாமம், இவருக்குக் கேட்க சகிக்காது! ஆனால் தானும்[ஹரியும்] ஹரனும் ஒன்றே என்ற தத்துவத்தை அவருக்கு உணர்த்த விரும்பினார் பகவான் கிருஷ்ணன்.

அவர் பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பீமனை அழைத்தார். நடைபெறவிருக்கும் குருக்ஷேத்திர யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டுமானால், அந்த புருஷாமிருகத்தின் உதவியும் தேவைப்படுகிறது. போர் வெற்றிக்காக நடத்த இருக்கும் யாகத்திற்கு அந்த மிருகத்தின் பாலானது தேவைபடுகிறது.

ஆகவே, அதனை சந்தித்து அதன் உதவியைக் கோரி வருமாறு அவர் பீமனை அனுப்பி வைத்தார். கூடவே, அவனிடம் 12 ருத்ராட்சங்களைத் தந்து, தன்னுடைய கோவிந்தா, கோபாலா என்ற பெயர்களை உச்சரித்தவாறே புருஷா (புருடா)மிருகத்தை நெருங்குமாறும் சொன்னார். ‘‘என் பெயரைக் கேட்க விரும்பாத புருஷா மிருகம், உன் மீது பாயும். நீ உடனே ஒரு ருத்ராட்சத்தை அந்த இடத்தில் போட்டுவிடு.அது ஒரு சிவலிங்கமாக மாறிவிடும். அதனைக் காணும் புருஷா மிருகம், அந்த சிவலிங்கத்துக்கு உரிய வழிபாட்டினை செய்த பிறகுதான் மறுவேலை பார்க்கும். அங்கிருந்து நீ ஓடிவிடு. பிறகு அது உன்னைத் துரத்தி வரும். அடுத்த இடத்தில் இன்னொரு ருத்திராட்சத்தைப் போடு. இதுவும் சிவலிங்கமாக மாறும். புருஷா மிருகமும் பூஜை செய்யத் தொடங்கி விடும்.

இப்படி பன்னிரண்டு இடங்களுக்கு ஓடி, ஓடி அதனை அலைக்கழித்தால் பன்னிரண்டாவது ருத்திராட்சம் விழும் இடத்தில் நான், பரமேஸ்வரனுடன் உங்கள் இருவருக்கும் காட்சி தருவேன்’’ என்று விளக்கி, பீமன் நடந்துகொள்ள வேண்டிய முறையைச் சொன்னார். பீமனும் அவ்வாறே செய்தான். அப்படி முதல் ருத்திராட்சம் விழுந்த இடம்தான் திருமலை. பன்னிரண்டாவது விழுந்த இடம் நட்டாலம். நட்டாலத்தில் ஹரியும் ஹரனும் இணைந்த சங்கரநாராயணராக மகாவிஷ்ணு காட்சி தந்து, சிவனும் விஷ்ணுவும் ஒன்று என்று புருஷா மிருகத்துக்கு மட்டுமல்ல, உலகுக்கே உணர்த்தினார். நடக்கயிருக்கும் யாகத்திற்கு தேவையான பால் தனது மடியில் இருந்து எடுத்துக்கொள்ள அனுமதி அளித்தது. புருஷா மிருகத்தின் உதவியும் குருக்ஷேத்திர யுத்தத்திற்குக் கிடைத்தது.
‘‘கோவிந்தா, கோபாலா…..சிவனே….வல்லபா…!!!”
இப்படி கர்ண பரம்பரையாகச் சொல்லப்படும் கதையை ஒவ்வொரு மகாசிவராத்திரி அன்றும் ஒரு குழுவினர் பீமனுடைய பிரதிநிதியாக ஓடி, ஓடிச் சென்று அந்த சிவாலயங்களைத் தொழுகிறார்கள்.

இந்த சிவாலய ஓட்டத்தில் பங்கு பெறுபவர்கள் மாசி மாதம் ஏகாதசி அன்று மாலை அணிந்து விரதம் மேற்கொள்வர். சிவராத்திரிக்கு முதல் நாள் மாலை 3 மணி அளவில் காவி வேட்டியும் காவித்துண்டும் அணிந்து கையில் விசிறியடன் சிறிய பையில் விபூதி எடுத்துக்கொண்டு வழியில் ஏற்படக்கூடிய செலவுகளுக்காக கொஞ்சம் பணமும் எடுத்துக்கொள்வர். முதற்கோயிலான முஞ்சிறை என்ற திருமலையில், தாமிரபரணி ஆற்றில் நீராடி, ஈசனை வணங்கிவிட்டு ஓட ஆரம்பிப்பர்.

இப்போதிலிருந்து பன்னிரண்டாவது கோயிலில் தரிசனம் முடிக்கும்வரை ‘‘கோவிந்தா, கோபாலா’’ என்ற கோஷத்தை ஒலித்தபடியே இருப்பார்கள். நிறைவாக மும்மூர்த்திகளும் அருளும் சுசீந்திரம் கோயிலுக்குச் சென்று வழிபட்டு ஓட்டத்தை முடிக்கிறார்கள். இது ஒரு பக்தி செலுத்தும் முறை.
கோவிந்தா… கோபாலா…சிவனே…வல்லபோ.

கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க மிக முக்கிய ஆண்மீக நிகழ்வானது சிவாலய ஓட்டம் இப்புனித யாத்திரை ஆனது வருகின்ற பிப்ரவரி மாதம் 23 ,24 மஹா சிவராத்திரி தினத்தன்று நடைப்பெறவுள்ளது.

  தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த  லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து   மஹாசிவராத்திரி தினத்தன்று  110 கீ.மீட்டர் தூரம் பாத யாத்திரையாகவும் வாகனங்களிலும் சென்று 12 சிவாலயங்களில் வீற்றிருக்கும் இறைவனை தரிசனம் செய்கின்றனர்.

12 சிவாலயங்களும் இறைவனின் திருநாமங்களும்:

1.முன்சிறை திருமலை ஸ்ரீ சூலப்பாணி தேவர்.
2.திக்குறிஷி ஸ்ரீ மஹாதேவர்
3.திற்பரப்பு ஸ்ரீ வீரபத்திர ஜடாதரர்
4.திருநந்திக்கரை ஸ்ரீ நந்தீகேஸ்வரர்
5.பொன்மனை ஸ்ரீ தீம்பிலேஷ்வரர்
6.பன்றிபாகம் ஸ்ரீ கிராத மூர்த்திஷ்வரர்
7.கல்குளம் ஸ்ரீ நயினார் நீலகண்டேஸ்வரர்
8.மேலான்கோடு ஸ்ரீ காலகாலர்
9.திருவிடைக்கோடு ஸ்ரீ சடையப்பர் (ஜாயப்பர்)
10.திருவிதாங்கோடு ஸ்ரீ பரசுபாணிஸ்வரர்
11.திருபன்றியோடு ஸ்ரீ பக்தவச்சலேஸ்வரர்
12.திருநட்டாலம் ஸ்ரீ சங்கர நாரயணர்

Maha Shivaraathri is coming on 23 & 24-02-2017

The 12 Shivalayams :

1.MUNCHIRAI Sri Shoolapani devar – THIRUMALAI Sri Thevar Thirukkovil

Way to 2nd
(Munchirai –Kunnathoor -Kappucaud -Vettunni -Marthandam theater Jn, -Unnamalaikadai -Payanam – Thikkurichi –10.662 Km.)

2.THICKKURISSY Sri Mahadevar Thirukkovil

Way to 3rd
(Thikkurichi –Chitharal -Ambalakkadai -Arumanai -Kaliyal –Thirpparappu -2.403 Km.)

3.THIRPPARAPPU Sri Veerabadhreswarar Thirukkovil

Way to 4th
(Thirpparappu –Kulasekaram –Thirunandhikkarai –8.144 Km.)

4.THIRUNANDHIKKARAI Sri Nandikeshwarar Thirukkovil

Way to 5th
(Thirunandhikkarai –Kulasekaram –Ponmanai –7.745 Km.)

5.PONMANAI Sri Theembileshwarar
Thirukkovil

Way to 6th
(Ponmanai –Chithirancode -Kumarapuram, -Muttacaud –Pannippagam –10.406 Km.)

6.PANNIPPAAGAM Sri Kiraathamoorthieshwarar Thirukkovil

Way to 7th
(Pannippagam –Saral vilai -Marunthukkottai -Padmanabhapuram –Kalkulam – 5.737 Km.)

7.KALKULAM Sri Nainar Neelakandaswamy Thirukkovil

Way to 8th
(Kalkulam –Padmanabhapuram –Melancode –3.378 Km.)

8.MELAANKODU Sri Kaalakaaleshwarar Thirukkovil

Way to 9th
(Melancode –Kumaracoil Bus stop -Villukuri –Thiruvidaicode –4.669 Km.)

9.THIRUVIDAIKKODU Sri Sadaiyappeshwarar Thirukkovil

Way to 10th
(Thiruvidaicode –Villukuri -Thuckalay -Keralapuram –Thiruvithancode –8.601 Km.)

10.THIRUVITHAAMKODU Sri Parshupaanieshwarar Thirukkovil

Way to 11th
(Thiruvithancode –Nadukkadai -Kodiyoor -Perambi -Palliyadi –Thirupanthicode –9.211 Km.)

11.THIRUPPANTIKKODU Sri Bhaktavachaleshwarar Thirukkovil

Way to 12th
(Thirupanthicode –Thirunattalam –4.082 Km.)

12.THIRUNATTALAM Sri Ardhanaareeshwarar Thirukkovil
& THIRU NATTALAM Sri Sankaranaaraayanar Thirukkovil.

ஓம் நமசிவாய

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *