- slide, இந்துசமய நூல்கள், தற்போதைய செய்திகள்

இதை தெரியாதவர்கள் அனுமான் பக்தர்களாக இருக்க முடியாது!!

இது கம்பராமாயணத்தில் பாலகாண்டத்தில் வரும் ஒரு பாடல் வரி..!

“அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைகண்டு  ;
அயலான் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான்
அவன் நம்மை அளித்து காப்பான்”!.

அனுமனுக்கு வணக்கம் வைக்கும் வகையில் இந்த பாடல் உருவாக்க பட்டிருக்கும்..

பொருள்:

முதல் அடி கம்பர் ஆரம்பிக்கிறார் அனுமன் பிறப்பில் அஞ்சிலே ஒன்று பெற்றான். அஞ்சு என்று கம்பர் விளிப்பது ஐம்பூதங்களை தான்.

“அஞ்சிலே ஒன்று பெற்றான்”(வாயு)

அனுமனை “வாயுபுத்திரன்” என்றும் வாயுமைந்தன் என்றும் விளிப்பார்கள் . காரணம் அவன் வாயுபகவானின் வாரிசு என்கிற படியால் .அதே கருத்தை கம்பர் தன் பாடலில் அஞ்சிலே ஒன்று பெற்றான் என்று ஆரம்பித்திருக்கிறார்

“அஞ்சிலே ஒன்றை தாவி”(நீர்)

இந்த கவி இடம் பெறும் படலம் பால காண்டம் சீதா பிராட்டியை தேடும் படலம் எனவே அஞ்சில் ஒன்றாகிய “நீரை” கடக்க போவதை அதாவது கடலை கடந்து போவதை கம்பர் தன் பாணியில் எடுத்து விட்டிருக்கிறார்.

“அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி” (காற்று).

எனும் போது “வான்” வீதி வழியாக தாவி கடல் கடக்கிறான் என்கிறார் கம்பர். ஆருயிர் சீதாதேவியை காக்க கடல் தாண்டி செல்கிறான் ,சொல்கிறார் கம்பர் .கடல் தாண்டி அயலூர் அதாவது இலங்கை வருகிறான், இங்கும் அந்த அஞ்சு என்பதை கம்பர் விடாமல் தொட்டு கொண்டே இருக்கிறார் .

“அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கை கண்டு” (நிலம்)

இது சீதாபிராட்டி பற்றியது ,சீதா “பூமா தேவி மகள்” எனவே இந்த வரி இங்கு . இதை விட அடுத்த வரி தன் முத்திரையை அழகாய் பதித்து விட்டு போயிருக்கிறார் கம்பர்  

“அயலான் ஊரில் அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்து காப்பான்”(நெருப்பு)

இலங்காபுரிக்கு “தீ” வைத்தான் என்று முடித்து அவன் நம்மை காப்பான் என்று நினைத்திருகிறார்  கவியர்.

ஒரே பாடலில் ஐம்புதங்களையும் வைத்து அழகாக எழுதியிருக்கிறார் கம்பர்.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *