- தற்போதைய செய்திகள், ஶ்ரீமத்பகவத்கீதை

ஶ்ரீமத்பகவத்கீதை தியான சுலோகங்கள்! கீதை-6

Spread the love

6.ஸ்ரீமத் பகவத் கீதை
தியான சுலோகங்கள்:

1.ஓம் தாயே பகவதே, சாட்சாத் பகவான் நாராயணனால் பார்த்தனுக்கு உபதேசிக்கப் பெற்றவள், புராண முனியாகிய வியாசரால் மஹாபாரதத்தில் அமைக்கப் பெற்றவள், அத்வைத அமிர்தத்தை பொழிபவள், பிறவிப் பிணியைப் போக்குபவள், பதினெட்டு அத்தியாயங்களை உடையவள் ஆகிய பகவதீ , உன்னைத் தியானிக்கிறேன்.

2.விசால புத்தியுடையவரும், நன்கு மலர்ந்தத் தாமரையிதழ் போன்ற கண்களை உடையவரும் ஆகிய வியாசரே, மகாபாரதம் என்னும் எண்ணெய் நிறைந்த ஞான தீபத்தை ஏற்றி வைத்த உமக்கு நமஸ்காரம்.

3.சரணடைந்தவர்களுக்குக் கற்பக விருக்ஷம் போன்றவனும், பசுவை ஓட்டுதற்கு ஒரு கையில் பிரம்பைப் பிடித்திருப்பவனும், கீதை என்னும் அமிர்தத்தைக் கறந்தவனும், சின் முத்திரை தாங்கியிருப்பவனும் ஆகிய கிருஷ்ணருக்கு நமஸ்காரம்.

4.உபநிஷதங்கள் யாவும் பசுக்கள், கிருஷ்ணர் பால் கறப்பவர், பார்த்தன் கன்று, அருந்துபவர் பேரறிஞர், கீதை என்னும் அமிர்தம் ஒப்பற்ற பால் ஆகிறது.

5.வசுதேவருடைய மகன், கம்சனையும், சாணூரனையும் கொன்றவன், தேவகிக்குப் பரமானந்தத்தைக் கொடுப்பவன், ஜகத்குரு, தேவன் ஆகிய கிருஷ்ணரை வணங்குகிறேன்.

6.குருஷேத்திரப் போரில் போர்க்களத்தில் இருந்த ரண நதிக்குப் பீஷ்மரும், துரோணரும் கரைகள்; ஜயத்யதன் ஜலம், காந்தார மன்னன் நீலோத்பலம் என்ற மலர், சல்லியன் சுறா மீன், கிருபன் என்பவன் பிரவாகம், கர்ணன் பேரலைகள், அஸ்வத்தாமனும், விகர்ணனும் பயங்கரமான மகர மீன்கள், துரியோதனன் நீர்ச்சுழல்.
கிருஷ்ணரைப் படகோட்டியாகக் கொண்டு , அது பாண்டவர்களால் கடக்கப்பட்டது.

7.பராசர் புதல்வராகிய வியாசரின் வாக்கு என்னும் நீரில் உதித்தப் பல கதைகளை மகரந்தமாகவுடைய,
ஹரிகதா பிரசங்கத்தால் மலர்ந்து உலகத்தில் நல்லோர் என்னும் வண்டுகளால் நாள்தோறும் ஆனந்தமாக அருந்தப் பெற்ற, கீதையின் மூலம் நறுமணத்தையுடைய, குற்றமற்ற மகாபாரதம் என்னும் தாமரைப் பூவானது கலியினுடைய தோஷத்தை நீக்க விரும்புபவனுக்கு நலம் தருவதாகுக.

8.யாருடைய கிருபையானது ஊமையைப் பேச வைக்கிறதோ, முடவனை மலையைத் தாண்ட செய்கிறதோ, அந்தப் பரமானந்த மாதவனை நான் வணங்குகிறேன்.

9.பிரம்மா, வருணன், இந்திரன், ருத்திரன், மருத் தேவதைகள் யாரை திவ்வியமான ஸ்துதிகளால் ஸ்துதிக்கிறார்களோ, ஸாமகானம் செய்கின்றவர்கள் யாரை அங்கமும், பதக்கிரமமும், உபநிஷதங்களும் கூடிய வேதங்களால் பாடுகிறார்களோ, யோகிகள் தியான முதிர்ச்சியால் மனதை யார்பால் வைத்து உணர்கிறார்களோ, சுர, அசுரக்கூட்டங்கள் யாருடைய முடிவை அறிகிறார்களில்லையோ, அந்த தெய்வத்திற்கு நமஸ்காரம்.

கீதப்பிரியை_ உமா ராதாகிருஷ்ணன்.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

1 thought on “ஶ்ரீமத்பகவத்கீதை தியான சுலோகங்கள்! கீதை-6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *