- தற்போதைய செய்திகள், ஶ்ரீமத்பகவத்கீதை

இந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை! தொடர்-5

Spread the love

ஶ்ரீமத்பகவத்கீதை-5

கீதையின் தொடக்கம்:

முன்னுரை: திருதராஷ்டிரன் மூத்தவனாக இருந்தாலும் பார்வையற்றவன் என்பதால் நாடாளும் உரிமை அவனுக்கில்லை என முடிவுசெய்யப்பட்டு பாண்டுவிற்கு முடிசூட்டினர். திருதராஷ்டிரனைத் தற்காலிக மன்னனாக்கிவிட்டு குந்தி, மாத்ரி என்ற இரு மனைவியரோடு வனம் சென்ற பாண்டு அங்கேயே மாண்டுவிட திருதராஷ்டிரனே மன்னனாக நீடித்தான்.

ஊனமுடையோர் நாடாள உரிமையில்லை ! என்பது நீதிநூல்கள் கூறும் விதி. துரியோதனனின் தந்தைக்கே குரு நாட்டின் மீது உரிமையில்லை; திருதராஷ்டிரன் ஒரு காபந்து ஆட்சியையே செய்து வந்தான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

தருமரே, துரியோதனனைவிட மூத்தவர் .பெரியோர்கள் வைத்த இளவரசனுக்கான தேர்வில் வென்று இளவரசனாக முறையாக முடிசூட்டப்பட்டவர் தருமரே என்பதை நினைவில் நிறுத்தி மகாபாரதப் போரை நாம் பார்க்க வேண்டும்.

போர் ஆரம்பிக்கும் முன்னர் வேதவியாசர் அரசவைக்கு வந்து மன்னா ! இப்போரை நீ நினைத்தால் தவிர்த்திருக்கலாம் என்றார். ஆனால் இனி நடக்கவிருக்கும் பேரழிவை உன் கண்களாலேயே பார்; நான் உனக்கு திவ்விய திருஷ்டியைத் தருகிறேன் ; அதன் மூலம் நீ இங்கிருந்தபடியே போர்க்களத்தில் நடப்பதை நேரிடையாகப் பார்க்கலாம் என்றார் வியாச முனிவர்.

மகரிஷியே! இதுநாள் வரைப் பார்வையற்றிருந்த என்னால் யாரையும் அடையாளம் காண முடியாது ; எனவே எனது தேரோட்டி சஞ்சயனுக்கு அந்த திவ்விய திருஷ்டியை அளியுங்கள்! அவன் எனக்கு நடப்பதைக் கூறுவான்! என்றான் திருதராஷ்டிரன். அவ்வாறே சஞ்சயன் திவ்விய திருஷ்டியைப் பெற்று போரில் நடப்பதை அப்படியே மன்னனுக்குக்
கூறிக் கொண்டிருந்தான்.

இக்கால ‘நேரலை’ என நாம் தொலைக்காட்சியில் பார்ப்பதைப் போல சஞ்சயன் கண்டு மன்னனுக்குக் கூறினான். கண்ணன் கூறிய கீதையை கேட்டது பார்த்தன் மட்டுமல்ல, அவனது தேரில் இருந்த அனுமனும், அரண்மனையில் இருந்த சஞ்சயனும் கூட கேட்டனர்.

கண்ணபெருமான் கூறிய கீதையை எழுதும் முன்னர், அதைத் துதித்து ஒன்பது தியான சுலோகங்கள் எழுதப்பட்டுள்ளன.
அதன் பிறகே கீதையின் முதல் அத்தியாயமான
” அர்ஜுன விஷாத யோகம்” வருகிறது.

கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

1 thought on “இந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை! தொடர்-5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *