- அரசியல், தற்போதைய செய்திகள்

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தங்கச் செங்கல் வழங்கத் தயார்: முகலாய இளவரசர்

Spread the love

புதுடெல்லி

அயோத்தியில் உள்ள ஶ்ரீராமர் கோயிலுக்கு நிலமும் தங்கச் செங்கல்லும் வழங்கத் தயாராக உள்ளதாகக் கூறியுள்ளார். முகலாய வம்சாவளியைச் சேர்ந்த இளவரசர் என உரிமை கோரும் ஹபீபுதீன் டூஸி.

அதேவேளையில் பாபர் மசூதி – ராம் ஜென்ம பூமி நிலத்தை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும். ஏனெனில் முகலாய மன்னர் பாபரின் வாரிசு நானே என அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டியில், “உச்ச நீதிமன்றம் சர்ச்சைக்குரிய நிலத்தை என்னிடம் ஒப்படைத்தால் அதை நானே ஶ்ரீராமர் கோயிலுக்குத் தானமாக வழங்குவேன். பாபர் மசூதி அமைக்கப்பட்ட இடத்தில்தான் ஶ்ரீராமர் கோயில் இருந்தது என்ற இந்துக்களின் நம்பிக்கையை உணர்வுகளை நான் மதிக்கிறேன்” என்றார்.

அயோத்தி ஶ்ரீராமர் கோயில் விவகாரத்தில், பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் ராமர் கோயில் இருந்ததாகக் கூறி, கடந்த 1992-ம் ஆண்டு, டிச.6-ல் கர சேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அயோத்தி வழக்கில் வாரிசு தொடர்பான வாதத்தில் தன்னையும் சேர்க்க வேண்டும். ஏனெனில் தானே முகலாய அரசரின் உண்மையான வாரிசு. அதற்கான ஆவணங்கள் என்னிடம் இருக்கின்றன என்று டூஸி வலியுறுத்தியுள்ளார். அவரது மனு இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், ஶ்ரீராமர் கோயில் கட்டிக்கொள்ள, தங்கச் செங்கல் ஒன்றை அன்பளிப்பாக வழங்க டூஸி முன்வந்துள்ளார்.

இவர், இதுவரை அயோத்திக்கு மூன்று முறை சென்றிருக்கிறார். அங்குள்ள தற்காலிக ராமர் கோயிலில் வணங்கியிருக்கிறார். கடந்த ஆண்டு ஶ்ரீராமர் கோயில் சென்றபோதும் அயோத்தி நிலத்தை கோயிலுக்கே அளித்துவிடுவதாக அவர் கூறியிருந்தார்.

மேலும் அவர், ஶ்ரீராமர் கோயில் சிதைக்கப்பட்டதற்கு மன்னிப்பு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *