- slide, அரசியல், ஆன்மீக செய்திகள், தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடி அத்திவரதரை தரிசிக்க வருவது ரத்து??

பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய உளவுப் பிரிவினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து உளவுப் பிரிவு டிஜிபி., யிடம் தகவல் கேட்டதாகவும், பிரதமர் பயணத் திட்டம் விவாதிக்கப்படும் நிலையிலும் உள்ளது

காஞ்சிபுரம்

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் பெருமாளின் தரிசனத்தை பிரதமர் மோடி தவிர்த்துள்ளதாகக் கூறப் படுகிறது.

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் பெருமாளை தரிசிப்பதற்கான ஆவல் பக்தர்களிடம் பெருமளவில் காணப் படுகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 நாட்கள் மட்டுமே புஷ்கரிணி நீரில் இருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அத்திவரதர் அருள் பாலிக்கிறார் என்பதால், பெருமளவிலான மக்கள் கூட்டம் கூட்டமாக அத்திவரதரை தரிசிக்க ஆவலுடன் திரண்டு வருகின்றனர்.

அத்திவரதர் பெருமானின் தரிசனத்தை முதலில் தொடங்கி வைத்ததே தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் என்பதால், இது எந்த அளவுக்கு விவிஐபி., முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பது வெளித்தெரிந்தது. தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடும்பத்துடன் வந்து, அத்திவரதரை தரிசித்துச் சென்றார்.

மேலும், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா, மற்றும் திமுக., தலைவர்களின் குடும்பத்தினர் மற்றும் கடவுள் எதிர்ப்பு கோஷ்டிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் வந்து தரிசித்துச் செல்வதால் கூட்டம் அலைமோதுகிறது கடந்த 19 நாட்களில் 25 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளார். இதுவரை 18 லட்சம் உண்டியல் வசூல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆன்மிக நம்பிக்கையுடன் தமது வழிபாட்டு நெறிமுறைகளை ஒளிவுமறைவின்றி பொதுமக்களிடம் வெளிப்படுத்தும் வகையில் ஆலயங்களுக்கு பக்தி சிரத்தையுடன் சென்று வழிபட்டு வரும் பிரதமர் மோடியும், அத்திவரதர் தரிசனத்துக்கு வருவார் என்று கூறப்பட்டது.

இது குறித்த தகவல்கள் whatsapp, facebook உள்ளிட்ட சமூகத் தளங்களில் வைரலாகப் பரவியது. குறிப்பாக, வரும் 23ம் தேதி அத்திவரதரை சயனக் கோலத்திலும் அதை தொடர்ந்து நின்ற கோலத்திலும் பிரதமர் தரிசிக்க உள்ளார் என்று தகவல்கள் பரவ தொடங்கின. ஆனால் அவற்றில் உண்மை இல்லை என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா தற்போது மறுத்துள்ளார்.

இதனிடையே, அத்திவரதர் தரிசனத்தில் ஏற்பட்ட குளறுபடிகளும், பக்தர்களுக்கு உள்ள சிரமங்களும் கோபங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று ஏற்பட்ட நெரிசலும், அதனால் அங்கு 4 பேர் உயிரிழந்ததும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், திமுக.வினர் உதவியுடன் மதுரை பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் வந்து தரிசித்து, விவிஐபி மரியாதையுடன் கோயிலில் அத்திவரதர் முன் அமர்ந்து வெகுநேரம் செலவிட்டது தொடர்பாக மக்களிடம் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதனால் போலீஸார் மட்டுமின்றி, மத்திய உளவுப் பிரிவினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து உளவுப் பிரிவு டிஜிபி.,யிடம் தகவல் கேட்டதாகவும், பிரதமர் பயணத் திட்டம் விவாதிக்கப்படும் நிலையில் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளதாகவும் பேச்சு தற்போது எழுந்தது.

இந்நிலையில், நெரிசல், உயிரிழப்பு, மற்றும் மத்திய உளவுப் பிரிவு கொடுத்த அறிக்கை ஆகியவற்றால், பிரதமர் மோடியின் அத்திவரதர் தரிசன திட்டம் ரத்து செய்யப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *