- ஆன்மீக சுற்றுலா, தற்போதைய செய்திகள், திருவிழாக்கள்

அத்திவரதர் நின்ற கோலத்தில் தரிசன தேதி மாற்றம் – நிர்வாகம்!!

காஞ்சிபுரத்தில் இப்போது அத்திவரதர் சயன கோலத்தில் காட்சி தருகிறார், வரும் ஆகஸ்டு 1ம் தேதி முதல் 17 வரையில் நின்ற கோலத்தில் காட்சி தருவார் என்று காஞ்சி வரதராஜப்பெருமாள் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

காஞ்சிபுரத்தில், 23-வது நாளான இன்று , அத்திவரதர் பச்சை பட்டு உடுத்தி, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

அதிகாலை 5 மணியளவில் நடை திறக்கப்பட்டது முதல், தற்போது வரை ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.

இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று அத்திவரதரை தரிசனம் செய்ய உள்ளதால், கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், அங்கு அவர் வரும் வேளையில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில், விஐபி தரிசனத்தில் முதல்வர், தரிசனம் முடித்து, அதே வழியில் வெளியே செல்வதால், பக்தர்கள் பொது தரிசனத்தில், வழக்கம்போல் செல்லலாம் என்றும், ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அத்திவரதரை இதுவரை 23 நாட்களில் 32 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளதுடன், நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேல் சாமி தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மாற்று திறனாளிகள், கர்ப்பிணிகள், முதியோர், மற்றும் குழந்தையுடன் வருபவர்களுக்கு, நேரடியாக செல்ல தனிவழியும், மற்ற பக்தர்கள் விரைவு தரிசனத்துக்கு, நான்கு வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கோயில் உட்பிரகாரத்தில் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. நேற்று முதல் முறையாக 6 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசித்து சென்றார்.

ஓம் நமோ நாராயணா

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *