- ஆன்மீக செய்திகள், தற்போதைய செய்திகள்

அத்திகிரிவரதர் தரிசனம் 16-தேதியுடன் நிறைவு? விஐபி தரிசனம் 15தேதி!

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்துக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். வரும் ஆகஸ்ட் 16 ந் தேதி நள்ளிரவுடன் தரிசனம் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் நடைபெறும் வைபவத்தில் நேற்று பச்சை நிற பட்டாடையில், மலர் அலங்காரத்துடன், மலர் கிரீடம் சூட்டியும், இரு கைகளிலும் பச்சைக் கிளிகளை ஏந்தி அத்திவரதர் காட்சி அளித்தார். தரிசனம் நிறைவுக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

நகருக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படாததால், பக்தர்கள் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து தரிசன வரிசையை அடைகிறார்கள். நேற்று 4 லட்சம் பேர் தரிசனம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4பக்கங்களிலிருந்தும் பக்தர்கள் உள்ளே வரிசையாக அனுப்பப்படுகின்றனர். கூட்ட நெரிசல் காரணமாக லட்சக்கணக்கான பக்தர்கள் திரும்பி செல்கின்றனர். பலர் மயங்கி விழுகின்றனர். கடந்த சில நாட்களாக 5லட்சத்திற்கும் மேல் தரிசனம் செய்கிறார்கள்.

தமிழக அரசு தினம் 10லட்சம் பேர் வருவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.  நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் 24 மணி நேரமும் அன்னதானம் மற்றும் குடிநீர் பால் உள்ளிட்டவை வழங்கினர். இனி வரும் நாட்களில் அதிகாலை வரை தரிசனம் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே அத்திவரதர் தரிசனம் ஒரு நாள் முன்கூட்டியே வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி நள்ளிரவுடன் நிறைவு பெறுவதாகவும், மறுநாள் அத்திவரதரை குளத்தில் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற உள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். முன்னதாக 15 ந்தேதியுடன் விஐபி தரிசனம் நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அத்திவரதர் அடுத்த 40 ஆண்டுகளுக்கு வாசம் செய்ய உள்ள அனந்த சரஸ் குளம் தூர் வாரப்பட்டு, உள் மண்டபம் சீரமைப்பு பணி 95% நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *