- slide, ஆன்மீக அறிவியல், ஆன்மீக செய்திகள், தற்போதைய செய்திகள்

அத்திகிரி வரதருடன் அனந்தசரஸ் குளத்தில் என்னென்ன வைக்கப்படும்!

அத்திகிரி வரதருடன் அனந்தசரஸ் குளத்தில் என்னென்ன வைக்கப்படுகிறது!!

காஞ்சிபுரம்

47 நாட்கள் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிலையில் இன்று அனந்தசரஸ் குளத்திற்குள் சயனகோலத்தில் வைக்கப்பட இருக்கிறார்.

இன்று காலை மற்றும் மாலை நித்தியப்படி பூஜை நடக்க இருக்கிறது. இரவு 10 மணிக்கு மேல் தைல காப்பு அணிவிக்கப்படும்.

அதாவது பச்சை கற்பூரம், ஏலக்காய், லவங்கம், சாதிக் காய், சாம்பிராணி, வெட்டிவேர், சந்தனாதி தைலம் ஆகியவற்றை காய்ச்சி வடிகட்டி அந்த தைலம் அத்திவரதர் சிலை மீது பூசப்படும்.

அத்தி மரத்திலான சிலை என்பதனால் தண்ணீருக்குள் வைக்கும்போது அடுத்த 40 ஆண்டுகள் வலுவாக இருக்க வேண்டும்.

அறிவியல் ரீதியாக பார்த்தோம் என்றால் தண்ணீருக்குள் திருமேனி இருக்கும்போது அதன் அருகே மீன், பாம்பு போன்றவையெல்லாம் செல்ல வாய்ப்பு இருக்கிறது.

அவை சிலை மீது உரசும்போது சேதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற தைலங்கள் பூசப்படுவதால் மீன், பாம்பு போன்றவை சிலைக்கு அருகே செல்லாது.

இன்று மாலை நித்தியப்படி பூஜை முடிந்தபிறகு அத்திகிரி வரதருக்கு பட்டு வஸ்திரம் அணிவிக்கப்படும்.

இரவு 10 மணியில் இருந்து 12 மணிக்குள் அனந்தசரஸ் குளத்திற்குள் அத்திவரதர் சிலை சயன நிலையில் வைக்கப்படும். செங்கல் தரையில்தான் அத்திவரதர் இருப்பார். சிலையின் தலைக்கு அடியில் கருங்கல் இருக்கும்.

அத்திகிரி வரதரை சயனகோலத்தில் வைக்கப்படும்போது வேறு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இனி 2059 -ஆண்டு தான் ஶ்ரீஆதி அத்திகிரி வரதரை தரிசிக்க முடியும் அதுவரை காத்திருப்போம்

வரதா.

.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *