- slide, ஆன்மீக அறிவியல், ஆன்மீக செய்திகள், தற்போதைய செய்திகள்

அனந்தசரஸ் குளம் தானாக நிரம்பும்! முன்பே கணித்த பெரியவர்! எப்படி நிரப்பும்?

காஞ்சிபுரம்

அத்திகிரி வரதர் வைபவம் நடப்பதற்கு சில நாட்கள் முன், திருக்கோயிலை சேர்த்த ஒரு வைஷ்ணவ பெரியவர் சொல்லியிருந்தார்.

“அனந்த சரஸ் குளத்து நீர் முழுவதையும் வெளியேற்றி பெருமாளை வெளியே எடுப்போம், பிறகு நாற்பத்தியெட்டு நாட்கள் கழித்து வைக்கும் போது மழை நீர் வந்து தானாகவே குளம் நிறையும்”.

தானாக குளம் எப்படி நிரம்பும், மழை எப்படி வரும் என்று பலர் கேள்வி எழுப்பினார்கள். யாரும் இதை நம்பவில்லை நம்பிக்கை இல்லாமலே இருந்தனர்

இதோ இன்று ஶ்ரீஆதி அத்திகிரி வரதர் வைபவம் முடிந்து, அனந்த சரஸ் திருக்குளம் செல்ல ஏற்பாடு நடைபெறும் வேளையில் இரவு முழுவதும் நல்ல மழை தற்போது வரை பெய்து கொண்டிருக்கிறது.

ஒன்றா இரண்டா அத்திகிரி வரதர் புகழ் பாட ! சொல்லி மாளாது இந்த ஆன்மீக அனுபவங்களையும், மிக ஆச்சரியமான சம்பவங்களையும்.

ஆச்சார அனுஷ்டானங்கள் சரியாக நடக்கும் பொழுது, நடப்பவை எல்லாம் சரியாகவே நடக்கும் என்பது இந்து தர்மத்தின் கோட்பாடு.

யாகசாலைகளில் கணீரென்று ஒலிக்கும் இந்து தர்ம வேத பாராயணத்தின் ஒவ்வொரு அட்சரத்துக்கும் தன்னை தானே காத்துக்கொள்ளும் சக்தி உண்டு இந்து தர்மம் வாழ்க.

வரதா

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *