- ஆன்மீக செய்திகள், தற்போதைய செய்திகள், திருவிழாக்கள்

அலங்காநல்லூர் அழகர்கோயில் ஆடி தேரோட்டம் கோலாகலம்!!

அழகர்கோயில் ஆடி தேரோட்டம் கோலாகலமாக நடந்தது!!

அலங்காநல்லுார்

அழகர்கோயிலில் உள்ள கள்ளழகர் கோயில் ஆடிதிருவிழா ஆக., 7-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆடி பிரமோற்ஸவ தேரோட்டம் நேற்று நடந்தது. அதிகாலை 5:15 மணிக்கு ஸ்ரீதேவி, பூமி தேவியருடன் சுவாமி எழுந்தருளினார்.

காலை 8:00 மணிக்கு கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷம் முழங்க பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர். காலை 10:38 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது.

தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து, எம்.எல்.ஏ., பெரியபுள்ளான்,

வெள்ளியங்குன்றம் ஜமீன்தார் சண்முகராஜபாண்டியபுலிகேசி பங்கேற்றனர்.

நேற்று இரவு ஸ்ரீ வரதராஜ பெருமாள் பூப்பல்லாக்கு அழகர்கோயில் ஆடிப் பெருவிழாவில் சிறப்பாக நடந்தது.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *