- தற்போதைய செய்திகள், புண்ணிய தலங்கள்

அத்திவரதரை தரிசனம் செய்ய கட்டணம் செலுத்த வேண்டும்- அமைச்சர்

அத்திவரதரை தரிசனம் செய்ய ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்- இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்.

காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் தரிசனத்திற்காக, சிறப்பு கட்டணமாக, ரூபாய் 50 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இலவச தரிசனமும் உண்டு என, அறநிலையத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று, காஞ்சிபுரத்தில் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம், வரதராஜப் பெருமாள் கோவில் குளத்தில் எழுந்தருளியுள்ள அத்தி வரதர், இம்மாதம் இறுதியில் வெளியில் எடுக்கப்படுகிறார். நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் இந்த நிகழ்வு.

ஜூலை, 1 முதல், கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக எழுந்தருள இருக்கிறார்.

இந்நிகழ்ச்சிக்கான வேலைகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி ஆகியோர், நேற்று இரவு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

பின் வரதராஜப் பெருமாள் கோவிலை அவர்கள் பார்வையிட்டனர்.கோவிலில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது,

அத்தி வரதர் வைபவத்திற்காக, தினமும், 2 லட்சம் பக்தர்களுக்கு வேண்டிய குடிநீர் வழங்கப்படும் என்றும் ஒன்பது மருத்துவக்குழு, 14 ஆம்புலன்ஸ், ஒன்பது தீயணைப்பு வாகனம், 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சிறப்பு கட்டணமாக, 50 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *