- ஆன்மீக செய்திகள், தற்போதைய செய்திகள்

A for Adam…! B for Bible..! மாணவர்களிடம் கிருஸ்தவ திணிப்பு!!

Spread the love

கடலூர்

வடலூரில் உள்ள ஈடன் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளியில் படிக்கின்ற மாணவர்களின் மனதில் குறிப்பிட்ட மதத்தினை பதியவைக்கும் முயற்சியாக A for Adam, B for Bible என்று அச்சிடப்பட்ட புத்தகம் கொடுக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.

சர்ச்சைக்குரிய பக்கங்கங்களை  புத்தகத்தில் இருந்து கிழித்து விட்டதாக ஏமாற்றி சிக்கிக் கொண்ட ஆசிரியையின் நாடகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள எஸ்.டி.ஈடன் மெட்ரிக்குலேசன் மேல் நிலைபள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கையேட்டில் தான் இந்த சர்ச்சைக்குரிய ஆங்கில எழுத்துப்பாடம் கற்பிக்கப்படுகின்றது.

ஏ பார் ஆப்பிள், பி பார் பால், சி பார் கேட் என்ற அர்த்தமெல்லாம் மாற்றப்பட்டு ஏ பார் ஆதாம், பி பார் பைபிள், சி பார் கிறிஸ்து, என்றும் ஐ பார் இம்மானுவேல், ஜெ பார் ஜீசஸ் என்று அந்த பட்டியல் நீள்கிறது. இதனை தினமும் மாணவர்கள் மனதில் பதியவைக்கும் வகையில் எழுத்து பயிற்சியும் கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அனைத்து மத குழந்தைகளும் படிக்கின்ற பள்ளியில் குறிபிட்ட மத அடையாளத்தை மாணவர்களின் மனதில் பதியவைப்பதற்கு ஒரு சில பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறைக்கும் மாவட்ட கல்வி அதிகாரியிடமும் புகார் அளிக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு குறித்து எஸ்.டி.ஈடன் பள்ளி தலைமை ஆசிரியை சுகிர்தா என்பவரிடம் விசாரித்த போது அது தெரியாமல் நிகழ்ந்த தவறு என்றும் அந்த கையேட்டில் உள்ள அந்த சர்ச்சைக்குரிய வாக்கியங்களை அனைத்து மாணவர்களின் கையேட்டில் இருந்து கிழித்து நீக்கி விட்டதாகவும் விளக்கம் அளித்தார்.

அவர் கூறியது உண்மைதானா ? என்பதை அரிய பள்ளிக்கூடத்துக்கே சென்று மாணவர்களின் கையேட்டை வாங்கிப்பார்த்து விசாரித்தபோது, தலைமை ஆசிரியை சுகிர்தா. பக்கங்கங்களை கிழித்ததாக நாடகமாடியது வெளிச்சத்திற்கு வந்தது.

ஏ பார் ஆதாம், பி பார் பைபிள் என்று ஆங்கில உச்சரிப்பு சரியாகத்தானே உள்ளது என்று நினைக்கலாம், அரசின் அங்கீகாரம் பெற்ற எந்த ஒரு கல்வி நிறுவனமும், குறிப்பிட்ட மதம் மற்றும் சாதியை ஊக்கப்படுத்தும் செயல்களை ஒரு போதும் செய்யக்கூடாது என்ற விதி இருக்க அதனை மீறி மாணவர் கையேட்டில் குறிப்பிட்ட மதத்தை ஊக்கப்படுத்தும் வாசகங்களை பாடமாக அச்சடித்து கொடுப்பது விதியை மீறிய செயல் என்று சுட்டிக்காட்டும் முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம் பள்ளியில் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.

ஆங்கில எழுத்து வரிசையை பள்ளி நிர்வாகங்கள் தங்களுக்கு விருப்பமான ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி மாற்றினால், சினிமாக்களில் சுட்டிக்காட்டப்படும் காட்சியை போல மாறிவிடும் என்று எச்சரிக்கின்றனர் கல்வியாளர்கள்..!

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *