- slide, தற்போதைய செய்திகள், திருவிழாக்கள்

அத்திவரதரை தரிசிக்க 6-சிறப்பு ரயில்கள் இயக்கம்!!

அத்திவரதரை தரிசிக்க 6-சிறப்பு ரயில்கள் இயக்கம்!!

அத்திகிரி வரதர் தரிசனத்திற்காக நாளை முதல் காஞ்சிபுரத்திற்கு தினந்தோறும் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.

காஞ்சிபுரம்

வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அத்திகிரி வரதர் வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த நான்கு நாட்களில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களை தெற்கு இரயில்வே இயக்கப்பட உள்ளன. முதல் சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து நாளை அதிகாலை 04.15 மணிக்கு புறப்பட்டு காலை 06.05 மணிக்கு காஞ்சிபுரம் சென்றடையும்.

இரண்டாவது சிறப்பு ரயிலானது சென்னை கடற்கரையிலிருந்து காலை 04.25 மணிக்கு புறப்பட்டு காலை 07.15 மணிக்கு காஞ்சிபுரம் சென்றடையும்.
பின்னர் செங்கல்பட்டில் இருந்து காலை 10.00 மணி, மதியம் 12.00 மணி, பிற்பகல் 3.10 மணி, மாலை 5.30 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதைபோல் காஞ்சிபுரத்தில் இருந்து காலை 7.30 மணி முதல் இரவு 7.45 மணி வரை செங்கல்பட்டு, தாம்பரம், கடற்கரைக்கு 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன

பக்தர்கள் இந்த இரயில் வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது

ஓம் நமோ நாராயணா

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *