- slide, தற்போதைய செய்திகள், திருவிழாக்கள்

அத்திவரதரை மீண்டும் காண 2059 ஆம் ஆண்டு வரை காத்திருக்கணும்!

அத்திவரதரை மீண்டும் 2059 ஆம் ஆண்டு தான் பார்க்க முடியும்! வாய்ப்பு கிடைக்குமா.!

திருவரங்கம், திருப்பதிக்கு எல்லாம் முந்தைய புராணச் சிறப்பு கொண்டது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் தலவரலாறு.

காஞ்சிபுரம் அத்தி வரதர் இன்று 1/7/2019 திங்கள் அன்று பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளின் ஆதி மூர்த்தம்தான் அத்தி வரதர். தற்போது நாம் கருவறையில் தரிசிப்பது வரதராஜப் பெருமாள் என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் அவர் பழைய சீவரம் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட தேவராஜப் பெருமாள்தான். இந்தக் கோயிலின் ஆதி மூர்த்தியான அத்தி வரதர் பிரம்ம தேவரால் உருவாக்கப்பட்டவர்.

அவர்தான் திருக்குளத்தில் வாசம் செய்வதுடன், 40 வருடங்களுக்கு ஒருமுறை வெளியில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தந்தார் வாழ்வில் ஒருமுறையேனும் இவரை தரிசிப்பது மோட்சத்தை அளிக்கும் என்பார்கள்.

இரண்டாவது முறை யாரேனும் தரிசித்தால் வைகுந்த பதவி பெறுவார்கள் என்பதும் ஐதீகம். மூன்று முறை தரிசித்த மகா பாக்கியவான்களும் இங்கு சிலருண்டு.!?

40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் வைபவம் இன்று கோலாகல தொடக்கம்:

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறக்கூடிய அத்திவரதர் வைபவம் இன்று கோலாகலமாக தொடங்கியது. இந்த அற்புத காட்சியை காண்பதற்காக திரளான பக்தர்கள் இன்று காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய செய்து வருகின்றனர்.

வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்த சரஸ் குளத்தின் நீரில் இருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார்.

இதற்கு முன்னதாக 1979ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி அத்திவரதர் வைபவம் நடைபெற்றது. அதன் பின்பு 40 ஆண்டு கழித்து இன்றுதான் மீண்டும் அத்திவரதர் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார்

கடந்த வெள்ளிக்கிழமை காலை 2:30மணியளவில் குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை, நீர் வடிவதற்காக வைக்கப்பட்டு  தைலக்காப்பு உள்ளிட்ட பல சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

பின்னர் இன்று அதிகாலை முதலே தரிசனம் தொடங்கியது. இந்த விழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இப்போதே வர தொடங்கி உள்ளனர்.காஞ்சிபுரத்தில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பார்வையிட்டார்.

விழாவின் முதல் நாளான இன்று அத்தி வரதரை தரிசனம் செய்ய தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அத்திவரதரை தரிசித்தார்.

வெளியிலிருந்து வரும் பக்தர்களுக்கு எந்த இடையூறு இல்லாமலும் தரிசனம் செய்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தற்காலிக பேருந்து நிலையங்கள், சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.  மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார் வசதியும் செய்யப்பட்டுள்ளது. கோவிலின் உள்ளேயே மருத்துவ முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.

அத்தி வரதர் வைபவத்தை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும் என்பதால், லட்ச கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் வர தொடங்கி உள்ளனர். 

ஒரு வேளை இந்த முறை அத்தி வரதர் தரிசனத்தை பார்க்க முடியாமல் போனால், மீண்டும் 40 ஆண்டுகள் கழித்தே பார்க்க முடியும். அந்த வகையில், அடுத்த வைபவம் 2059 ஆம் ஆண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே  நீண்ட ஆண்டுகளாக அத்தி வரதர் தரிசனத்திற்காக காத்திருந்தவர்கள் இந்த ஆண்டே பார்த்து விடுவது  நல்ல வாய்ப்பாக அமையும். இல்லை என்றால் மீண்டும் 40 வருடங்கள் காத்திருக்க வேண்டியது தான்…!

ஓம் நமோ நாராயணா

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *