- புண்ணிய தலங்கள்

பாழடைந்த நிலையில் பாடல் பெற்ற தலம்! பண கஷ்டம் தீர்க்கும் லட்சுமிபுரிஸ்வரர்!

Spread the love

பண கஷ்டம் தீர்க்கும்
திருநின்றியூர் ஸ்ரீலட்சுமிபுரீஸ்வரர் சிவாலயம், நாகை மாவட்டம்

இங்கு அனுஷ நட்சத்திர நாட்களில் பெரிய அகல் விளக்குகளில் மூன்று திரி இட்டு ஏற்றி, தீபங்களைச் சுமந்தவாறு அடிப் பிரச்சட்சிணம் செய்து வழிபட்டு அவரவர் வசதிக்கு ஏற்ப தங்கம், வெள்ளி மாங்கல்யம் மற்றும் மாங்கல்ய சரடுகளை ஏழைச் சுமங்கலிகளுக்கு தானமாக அளித்து வருவதால் பணக் கஷ்டங்கள் தீரும்.

அச்சிறுப்பாக்கம் அடுத்துள்ள கிராமம் பாபுராயன்பேட்டையில், 16ம் நூற்றண்டைச் சேர்ந்த கோவில், பராமரிக்கப்படாமல் பாழடைந்து கிடப்பது பக்தர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இக்கிராமத்தில், பழமை வாய்ந்த விஜய வரதராஜர் கோவில் எனும் வைணவத்திரு த்தலம் உள்ளது. 20 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்துள்ள இக்கோவில் வளாகம், தற்போது முற்றிலும் சிதிலமடைந்து, காணப்படுகிறது. இக்கோவிலு க்குச் சொந்தமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களும் உள்ளதாகக்கூறப்படுகிறது. 

ஸ்ரீரங்கத்திற்கு இணையானது: ஸ்ரீ விஜய வரதராஜபெருமாள் நின்ற திருக்கோலத்தில் மூலவராக அருள்பாலிக்கும் இங்கு, விஜயவல்லித்தாயாரும் எழுந்தருளியுள்ளார். இந்த வளாகத்திலேயே, ராமர் சீதை, வேணுகோபாலசுவாமி, ராதா ருக்மணி, ஆஞ்சநேயர் ஆகிய சன்னிதிகளும் உள்ளன. ஆழ்வார்களுக்கும், கருடனுக்கும் சன்னிதி உள்ளது. மேலும் காஞ்சியில் உள்ளது போல் பொன்பல்லி, வெள்ளி பல்லி மண்டபங்களும் காணப் படுகின்றன. உள்பிரகாரத்தில் விஜய புஷ்கரணி தீர்த்தம், வெளிப் பிரகாரத்தில் கமல தீர்த்தம் போன்ற தீர்த்தங்களும் உள்ளன. ஏறத்தாழ ஸ்ரீரங்கம் ÷ காவிலுக்கு இணையான திருத்தலமாக இது விளங்கி வந்ததாகவும் தெரிகிறது. காஞ்சி வரதராஜபெருமாள் ஆண்டுக்கொரு முறை இங்கே எழுந்தரு ள்வது வழக்கம் என்றும் ஆன்மிகப்பெரியவர்கள் கூறுகின்றனர். ஐந்து கோபுரங்களும், ஐந்து பிரகாரங்களும் கொண்ட பிரம்மாண்ட கோவிலாக இது உள்ளது. 

தேவாரம் பாடப்பெற்ற திருநின்றியூர் சிவாலயத்தின் நிலையை பாரீர்.

சிவனடியார்கள் எல்லாம் தமிழ்நாட்டில் தான் இருக்கிறீர்களா.
சிவபக்தர்களே பெரிய பெரிய சிவாலயங்களுக்கு சென்று பகட்டான பரிகாரத்தை செய்யும் அன்பர்களே .ஒரு கோவிலின் அழிவு வரலாறு அழிவதற்கு சமம்.


தயவு செய்து பாழ்அடைந்து ஒரு கால பூஜைக்கே சிரமமுள்ள கோவில்களை தேடிக்கண்டறிந்து வாரந்தோறும் அக்கோவிலுக்கு சென்று குடும்பத்துடன் உழவார பணிகளை மேற்கொண்டு கோவிலுக்கு தேவையான பூஜை பொருட்களை இயன்ற அளவு செய்து ஈசனின் பூரண அருள்பெற வேண்டும் ஊர் மக்கள்.

தல சிறப்பு:இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.பழைய மாடகோயில், பிறகு மாற்றி கட்டியதாக சொல்லப்படுகிறது. எப்படி ஈசனுக்கு இப்பெயர் வந்தது என ஆதாரம் இல்லை.சிவனின்தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 19 வது தேவாரத்தலம் ஆகும்.

ஆசாபாசம் அந்தம்வரை விடாது’ என்பர். ஆசை என்ற இரண்டெழுத்து ஒவ்வொரு மனிதனையும் ஆட்டுவிக்கிறது. என்னதான் பற்று பாசங்களைத் துறக்கவேண்டுமென்று ஞானிகள் போதித்தா லும், அந்திமக்காலம்வரை நம் ஆசை வளர்ந்துகொண்டேதான் போகிறது.

மனதில் நல்ல கருத்துகளைப் பதித்துக் கொண்டு நியாயமான ஆசைகளை வளர்த்துக்கொள்வதில் தவறில்லை. அத்தகைய நியாயமான ஆசைகளை இறைவன் ஒருபொழுதும் நிறைவேற்றத் தவறியதுமில்லை. அந்த வகையில் திருமகளின் நியாயமான ஆசையை நிறைவேற்றித் தந்ததொரு திருத்தலம்- அப்பர், சுந்தரர், சம்பந்தரால் பாடல்பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் 19-ஆவதாக விளங்குகின்ற தலம்- மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெரும் சிறப்புகளைக் கொண்ட தலம்- இந்திரன், அகத்தியர், பரசுராமன், ஐராவதம், பசு, சோழமன்னர்கள் வழிபட்டுப் பேறுபெற்ற தலம்- கடனில் தத்தளித்து, பொருள் பற்றாக்குறையோடு ஏங்கிவாழும் மக்களின் குறைதீர வரமருளும் ஒப்பற்ற திருத்தலம்தான் திருநின்றியூர் ஸ்ரீலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோவில்.

இறைவன்: லட்சுமிபுரீஸ்வரர்.

இறைவி: உலகநாயகி.

தீர்த்தம்: மகாலட்சுமி தீர்த்தம், யம தீர்த்தம், நீல தீர்த்தம்.

தலவிருட்சம்: விளாமரம்.

1,300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இவ்வாலயம் தருமபுர ஆதீனத்திற்குட்பட்டது. திருமகள், திருமாலின் திருமார்பில் நீங்காதிருக்கும் வரம்வேண்டி ஈசனை வழிபட்டுப் பேறுபெற்றதால் திருநின்றியூர் என்றும்; திருமாலுக்கு ஸ்ரீநிவாசன் என்ற பெயர் ஏற்படக் காரணமானதால்- திருமகள் ஈசனுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றிசெலுத்தும் வகையில் திருநன்றியூர் என்றும் பெயர்பெற்றது.

திருநின்றியூர் என பெயர்வர மற்றொரு காரணமும் உண்டு. சிதம்பரம் நடராஜரை தினமும் தரிசித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான் சோழமன்னன் ஒருவன். அப்படி ஒருநாள் திரும்பிவரும்போது காவலாளிகள் கொண்டுசென்ற தீப்பந்தங்கள் அணைந்துவிட்டன.

அதனை மீண்டும் எரியவைக்க முயற்சிசெய்தும் முடியவில்லை. அவர்கள் இத்தலத்தைக் கடந்தபோது தானாகவே தீப்பந்தங்கள் எரியத்தொடங்கின. தொடர்ந்து இது நடக்கலாயிற்று. காரணம் புரியாமல் அனைவரும் திகைத்தனர். ஒருசமயம் இப்பகுதியில் பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்த இடையனிடம், “”இங்கே மகிமையான நிகழ்ச்சிகள் நிகழுமா?” எனக் கேட்டான் மன்னன். அதற்கு அவன், “”மன்னரே! இந்தப் பகுதியில் லிங்கம் ஒன்றுள்ளது. அதில் நான் மேய்க்கும் பசுக்களில் சில தானாகவே சென்று பால்சொரிகின்றன” என்றான். மன்னனும் அவ்விடம் சென்று சிவலிங்கத்தைக் கண்டான்.

அதனை வேறிடத்தில் வைத்து கோவில் கட்டுவதற்காக அகழ்ந்தபோது ரத்தம் வெளிப்பட்டது. வெளியே எடுக்கும் முயற்சி தோற்றது. இச்சம்பவம் நடை பெற்றது அனுஷ நட்சத்திர தினத்தில். பின் அங்கேயே அனுஷ நட்சத்திர நாளில் கோவில் எழுப்பி வழிபட்டான் மன்னன். பந்தத்தின் திரி அணைந்து, பின் தானே எரிந்து நின்றதால் திரிநின்றியூர் என பெயர் வந்ததாகக் கூறுகின்றனர்.
இத்தலத்திலுள்ள செல்வ கணபதி சகல சம்பத்துகளுக்கும் அதிபதி. சகல மேன்மைகளையும் தரவல்லவர். செல்வகணபதி சுவாமியை அனுஷ நட்சத்திர நாளில் தொழுதபேர்க்கு செல்வச்செழிப்பு கிட்டுமென்பது உண்மை.

தந்தை ஜமதக்னி முனிவரின் ஆணைக்கிணங்கி, தாய் ரேணுகா தேவியின் தலையைக் கொய்தார் பரசுராமர். இதனால் ஏற்பட்ட தோஷம் நீங்க பரசுராமரும், ஜமதக்னி முனிவரும் திருநின்றியூர் திருத்தலத்தை அடைந்து வணங்கினர். சிவபெருமான் காட்சிதந்து தோஷமகற்றி, வெட்டுண்டு மாய்ந்த தாய்க்கு அமாவாசை திதியில் மேன்மையருளினார். இன்றும் அமாவாசை திதியன்று இறந்தவர்களுக்கு சாந்தியும், சந்தோஷமும் தர இத்தலத்தில் பூஜை புரிந்தால் பூரண பலனுண்டு என்கின்றனர்.

கார்த்திகை மாதம் முழுவதும் ரேணுகாம்பாளுடன் ஜமதக்னி மகரிஷியும் பரசுராமரும் இத்தலத்தில் பூஜை புரிகின்றனர் என்று சொல்லப்படுகிறது.

வித்தை பெருக, கீர்த்தி மிகுந்துவர, எண்ணிய மணாளனை அடைந்து இன்பம் பெற, தாய்- தந்தையர் நீண்ட ஆயுளுடன் வாழ, மூதாதையர் ஆஸ்தி விருத்தியடைய, வெளிநாடு சென்று பெருந்திரவியம் சேர்க்க, நீண்டகாலம் இளமைப்பொலிவுடன் வாழ- இத் தலத்தில் மயில்வாகனத்தில் அமர்ந்தருளும் ஸ்ரீவள்ளி- தேவயானை சமேதரான சுப்ரமணியரை பரிபூரண சரணாகதி செய்திட்டால் போதும்; அனைத்து காரியங்களும் சித்திக்கும் என்கிறது அகத்திய ஜீவநாடி.

அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவுகளுடன் செல்வாக்கோடு வாழ்வார்கள். அந் தஸ்துள்ள பதவிகளில் இருப்பார்கள். அரசாங்க பாராட்டும் பெறுவார்கள். பிறர் குணமறிந்து செயல்படுவதில் வல்லவர்கள். ஊர் ஊராக சுற்றும் குணம்கொண்ட இவர்கள் அடிக்கடியோ, அனுஷ நட்சத்திர நாளிலோ, தங்களது பிறந்த நாளிலோ, திருமண நாளிலோ இத்தல ஈசனுக்கு வழிபாடுகள் செய்தால் வாழ்வு சிறக்கும்.

அனுஷ நட்சத்திர ஆண்கள் துவாதசி திதியன்றும், பெண்கள் வரலக்ஷ்மி நோன்பன்றும் வழிபாடுகள் மேற்கொண்டால் கூடுதல் நன்மைபயக்கும். அனைத்து ராசியினரும் அனுஷ நட்சத்திர நாளில் வழிபாடுகள் மேற்கொண்டால் பயம், பாவம் மற்றும் நோய் நீங்கி சகலமேன்மையுடன் வாழ்வர் என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் பாடியிருக்கிறார். அதில் மிகமுக்கியமானது என்னவென்றால்- சிவனுக்கு அபிஷேகம் செய்து, சந்தனக்காப்பிட்டு, அதில் மாதுளை முத்துக்களைப் பதித்து வழிபாடு செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது உறுதி. மாதுளை முத்துக்கள் மாணிக்கக் கற்களையொத்தது. திருமகள் இந்த மாதுளம் முத்துக்களில் வாசம் செய்கின்றாள். இதனால் சிவபெருமானை அபிஷேகித்து, அர்ச்சித்தால், சம்பத்துகள் குறைவின்றிச் சேரும் என்பது காகபுஜண்டர் வாக்கு.

அவசரத்தில் நாம் பல தவறுகளைச் செய்துவிடுகிறோம். மனைவியின் மனதைப் புண்படுத்திப் பேசுவதும், அவள் நோகும்வண்ணம் செய்யும் கர்மங்களும் பெரிய பாவ தோஷத்தை உண்டாக்கும். வேடிக்கையாக சிலரைப் பற்றி பேசிச் சிரிப்பதும், அடுத்தவர் அறியாது அவரை ஏளனமாகப் பேசுவதும் எண்ணுதலும், எள்ளி நகையாடுதலும் பெரும் தோஷத்தை அள்ளித்தரும்.

“தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்’ என்பது சான்றோர் வாக்கு. ஒருவன் செல்வந்தன் என்றால் அவன் முன்னை வினை சிறப்புடையது என்பதே பொருள். முன்சொன்ன தோஷங்கள் நம்மை துயரத்துக்குள்ளாக்கும். தாய்- தந்தையரை பேணா தோஷம், சகோதரரை வஞ்சித்த பாவம், வியாபாரத்தில் சொல்லும் பொய் இவை யாவும் வறுத்தும். பாவங்களை அறியாது செய்தால் அதற்கு விமோசனம் உண்டு. அறிந்து செய்யும் பாவங்களை சண்டாளம் என்கிறார் பாம்பாட்டியார். பின்னைப் பிறவியில் இவற்றிலிருந்து விடுபட்டு பிறப் பிலா பேரின்பம் பெறவும், இம்மையில் சுகபோகத்துடன் வாழவும் திருநின்றியூருறை உலகநாயகி அம்மனை தொழவேண்டும்.
காலை 6.30 மணிமுதல் 11.30 மணிவரையிலும்; மாலை 4.00 மணிமுதல் இரவு 7.30 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

ஆலயத்தொடர்புக்கு: கே. சுப்ரமணிய சிவாச்சார்யார், அலைபேசி: 94426 96327 ஸ்ரீலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோவில், எஸ்.எஸ். நல்லூர்(வழி), திருநின்றியூர் போஸ்ட், சீர்காழி வட்டம், நாகை மாவட்டம்- 609 118.
அமைவிடம்: மயிலாடுதுறையிலிருந்து வைத்தீஸ்வரன் கோவில் செல்லும் கற்பாதையில் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருநின்றியூர் பஸ் நிறுத்தத்திலிருந்து ஐந்து நிமிடம் நடைபயணம் மேற்கொண்டால் கோவிலை அடையலாம்.

ஸ்வாமி நாதன் கோபாலன்

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *