- slide, தற்போதைய செய்திகள், பரிகாரங்கள்

வீட்டில் திருவிளக்கு ஏற்றுவதால் இவ்வளவு நன்மை இருக்கா!!

Spread the love

“திருவிளக்கு எரிந்த வீடு வீணாய்ப் போகாது.”
தினமும் வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு நன்மை இருக்கா? இருக்கே!

“விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது.

நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?

தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை(நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி அதிகமாக உண்டு.

அவ்வாறு ஈர்க்கும்போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும்.

இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்து விட்டால் வீடே மயானம் போல் தோன்றும்.

எல்லோருமே சோர்வாக இருப்பார்கள்.
இதுவே விளக்கேற்றுவதன் தத்துவம் ஆகும்.

நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிட்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மை அடைகிறது.

அதேபோல மணிப்பூரகம், அனாகதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற தூய்மை அடைந்து நற்பலன்களை அடையும்.

நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரியநாடி, சந்திர நாடி, சூட்சம நாடி ஆகியவை மிக முக்கியமாக உள்ளது.

சூரியநாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திரநாடி குளுமையை நமக்கு கொடுக்கிறது.

சூட்சம நாடி அந்த பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு ஆன்மிக பாதையை ஏற்படுத்தும்.

நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரியநாடி சுறுசுறுப்படையும்.

நெய் விளக்கு சூட்சம நாடியை தூண்டிவிட உதவும்.

பொதுவாக நெய்தீபம் சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலன்களையும் தரும்.

திருவிளக்கு எங்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். இதற்கு தடையேதும் இல்லை. பொதுவாக மாலை 6.30க்கு ஏற்றுவதே நமது மரபு. இதை கருக்கல் நேரம் என்பர்கள்

எனென்றால் சூரியன் மறைந்ததும் சில எதிர்மறை சக்திகள் சுற்றுசூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்பிருக்கிறது.

ஒளியின் முன் அந்த எதிர்மறை சக்திகள் அடிபட்டுபோகும். எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகின்றோம் என்பது அறிவியல் உண்மையாகும்.

ஒரு நாளிதழில் வெளிவந்த நிகழ்வு இது.
அமெரிக்காவில் இருக்கும் தன் மகனின் வீட்டுக்கு சென்றிருக்கும் ஒரு தாய் மாலையில் தன் மகனும், மருமகளும் தாமதமாக வீட்டுக்கு வருவதை பார்க்கின்றார். இருவரும் வேலைக்கு செல்பவர்கள்.

ஒருநாள் மகன் முன்னதாகவும் ஒருநாள் மருமகள் முன்னதாகவும் வருவார்கள்.

ஒருநாள் மகனை அழைத்து தாமதமாக வரும் காரணம் கேட்க ”உனக்கு இதெல்லாம் புரியாதம்மா என்றும், எங்கள் இருவருக்கும் பயங்கர ஸ்ட்ரெஸ்!!!! இருவரும் கவுன்சிலிங் போய்வருகிறோம்.

ஒருமணி நேரத்துக்கு அந்த டாக்டருக்கு கொடுக்கும் தொகை அங்கு அதிகம்.

மிக சிறந்த டாக்டர் அவரது சிகிச்சையில் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினார்.

அதற்கு அந்த தாய், நாளை அந்த டாக்டரை பார்க்க போக வேண்டாம் என்றும், சீக்கிரமாக இருவரும் வீட்டுக்கு வரவேண்டும் என்று கூறினார்.

அடுத்த நாள் மாலை வீட்டுக்குள் நுழைந்த மகன், மருமகள் மூக்கை சுகந்த மனம் துளைக்கின்றது.

இருவரையும் கை, கால்கள் கழுவி உடை மாற்றி பூஜை அறைக்கு வருமாறு தாய் கூறினர்.

அவர்களும் அவ்வாறு அங்கே செல்கின்றனர். மனம் வீசும் மலர்களின் வாசம்… அழகான தீப ஒளி நிறைந்த அந்த பூஜை அறையில் சற்றுநேரம் அமரச்சொல்கிறார்.

இருவரும் தாமாகவே கண்மூடி அந்த சூழலின் இன்பத்தை அனுபவிக்கின்றனர்கள்.

பின் கண் திறந்தபோது கவுன்சிலிங்கில் கிடைக்காத மிகுந்த அமைதி கிடைத்ததாக சொல்ல தாயார் மகிழ்ந்தார்.

குறிப்பு:-

மெழுகுவர்த்தி எற்றக்கூடாது. இதிலிருந்து வரும் புகை உடல் நலத்தை கெடுக்கும்.

ஆஸ்துமா, மார்புபுற்றுநோய் இவைகளுக்கு மெழுகுவர்த்தி தான் தாய்.

மண்ணெண்ணெய் விளக்கும் பயன்படுத்த வேண்டாம்.

வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக் கொள்ள வேண்டும்.

இப்படி செய்தால் அவர்களின் முகப்பொலிவு பன்மடங்காக கூடும்.

என்று

” திருவிளக்கேற்றிய வீடு வீண் போகாது.” வாழ்க வளமுடன்..

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *