- பொன் மொழிகள்

விவேகானந்தரின் அன்மீக துறவறம்

Spread the love

விவேகானந்தருக்கு தனது கல்வியை முடித்ததும் துறவறம் மீது பற்று வந்தது. அதை தன் தாயிடம் தெரிவித்தார். உடனே விவேகானந்தரிடம் ஒரு கத்தி ஒன்றை எடுத்து வருமாறு தாய் கூறினார்.

விவேகானந்தரும் கத்தியை எடுத்துவந்தார். ஆனால், அவரது தாயாரோ, ‘இன்னும் உனக்கு துறவறம் மேற்கொள்வதற்கான பக்குவம் ஏற்படவில்லை’ என கூறி விட்டார். ஒவ்வொருமுறை விவேகானந்தர் துறவறம் பற்றி பேச்சு எடுக்கும் போதல்லாம் கத்தியை எடுத்துவருமாறு அவரின் தாயார் கூறுவார். பிறகு அவருக்குப் பக்குவம் வரவில்லை எனக்கூறி நிராகரித்து விடுவார். ஆனால், அதுபோன்று ஒருமுறை கேட்டபோது, விவேகானந்தரின் துறவறத்துக்கு அவரின் தாயார் சம்மதம் தெரிவித்துவிட்டார். இதனால், அவருக்கு மிகுந்த சந்தேகம் எழவே, அதைத் தன் தாயிடமே வினவினார்.

அதற்கு அவரின் தாயாரோ “துறவறம் மேற்கொள்பவர்கள், அடுத்தவர்களின் துன்பத்தை தன் துன்பமாக எண்ணிச் செயல்பட வேண்டும். ஒவ்வொருமுறை நீ என்னிடம் கத்தியை எடுத்துவந்து கொடுக்கும்போதும், அதன் கூர்மையான பகுதி, என்னை நோக்கி திருப்பி இருக்குமாறு தருவாய். ஆனால், இம்முறை கத்தியின் கைப்பிடி இருந்த பகுதியை என்னிடம் தந்தாய். இதன்மூலம் உனக்கு துறவறம் மேற்கொள்வதற்கான தகுதி வந்துவிட்டது எனத் தெரிகிறது. ஆகையால் தற்போது நீ கிளம்பலாம்” என்றார்.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *