கோயில் வலம் வருகையில்!
“யானி கானி ச பாபானி
ஜன்மாந்தர-க்ருதானிச
தானி தானி விநச்யந்தி
பிரதக்ஷிண பதே பதே”
அறிந்து பிழை செய்வதால் ஏற்படுகின்ற துன்பங்கள் ஒருபுறம்; ஆனால்
நம்மை அறியாமலேயே நம்முடைய செயல்களால் பிறருக்கு துன்பத்தையோ, மன உளைச்சலையோ ஏற்படுத்தி விட்டால் அதனால் ஏற்படுகின்ற துன்பங்கள் கண்ணுக்குத் தெரியாத தடைகளாக, தாமதங்களாக, ஏமாற்றங்களாக, இழப்புகளாக நம்மைத் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
இத்தகைய துன்பங்கள் ஏமாற்றங்களிலிருந்து விடுபட கோயிலில் குறைந்தது.
நான்கு முறையாவது வலம்வந்து வழிபடுவது நல்லது. அப்போது வேறு எதையாவது நினைத்துக் கொண்டிராமல்,
இச்சுலோகத்தை சொல்லி வலம் வருவதால் இத்தகைய தடைகள், தோஷங்கள் விலகி நன்மை ஏற்படும்.
–லதா வெங்கடேஸ்வரன்.
இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.