இன்றைய ராசிபலன்

Spread the love

மேஷம்: சமயோசிதமாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு நிறைவேறும். பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

ரிஷபம்: மனதில் நம்பிக்கை குறைவு ஏற்படலாம்.தொழிலில் உற்பத்தி விற்பனை சீரான லாபம் இருக்கும். சேமிப்பு திடீர் செலவால் கரையும். பெண்கள் நகை, பணத்தை கவனமுடன் கையாளவும். சிலருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

மிதுனம்: பேச்சு, செயலில் இனிமை நிறைந்திருக்கும். தொழில் வியாபாரம் செழிக்க நவீன மாற்றம் செய்வீர்கள். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். அரசு உதவி பெற அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

கடகம்: யாருக்கும் வாக்குறுதி அளிக்க வேண்டாம். கூடுதல் உழைப்பால் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். மிதமான பணவரவு இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்ட திட்டத்தை மதிப்பது நல்லது. பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர்.

சிம்மம்: தேவையான பணம் கையில் இருக்கும். காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும் முடித்து விடுவீர்கள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனை களை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.

கன்னி: தந்தை வழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்குச் சென்று வருவீர்கள்.

துலாம்: உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள் வீர்கள்.

விருச்சிகம்: விருச்சிகம்: தெய்வ அனுகிரகம் நிறைந்த நாளாக இருக்கும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிந்துவிடும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்வார்கள்.

தனுசு: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனால், திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுடன் செலவும் உண்டாகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

மகரம்: எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்குக் குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும்.

கும்பம்: தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத் துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

மீனம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங் களைத் தவிர்ப்பது நல்லது. உறவினர் கள் வருகையால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும்.