- ஆன்மீக அறிவியல்

‘ஆழி மழை கண்ணா’ இதற்கு ஆண்டாள் கொடுத்த விளக்கம்

Spread the love

தெய்வத் தமிழில் இனியப் பாடல்களைப் பாடிய ஆண்டாள் ஒரு தெய்வீகக் கவி மட்டுமல்ல; விஞ்ஞான மேதையும் கூட அவரது திருப்பாவையில் மெய்ஞானமும், விஞ்ஞானமும் இணைந்துள்ளது.
திருப்பாவையின் நான்காவதுப் பாடலான
“ஆழி மழைக் கண்ணா”
-என்ற பாடல் முழுவதும் விஞ்ஞானக் கருத்தே பரவியிருக்கிறது.

மேகம் கடல்நீரை முகர்ந்துக்கொண்டு கருக்கொண்டு மழையாகப் பொழிகிறது என்பதை மேனாட்டு அறிஞர் கண்டு கூறும் முன்பே தமிழ் பெண்ணான ஆண்டாள் கூறிவிட்டார். என்னே அவரது மேதமை!

அதை விளக்கும் பாடல்:
“ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு, முகர்ந்து கொடார்த்தேறி
ஊழிமுதல்வன் உருவம்போல் மெய்கருத்து
பாழியந் தோளுடைப் பத்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்பரிபோல் நின்றதிர்ந்து
தாளாதே சார்ங்கம் உதைத்தச் சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.”


கடல்நீரை மேகம் எடுத்துக்கொண்டு கரியமேகமாக மாறி மின்னலாக மின்னி, இடியாக முழங்கி சரமழையாகப்பொழிவதை எத்தனை அழகாக விளக்குகிறார் ஆண்டாள்.
மேனாட்டு அறிஞர்கூறுவதற்கு , முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே நம் கோதை நாச்சியார் கூறிவிட்டார். ஆண்டாளின் இலக்கியப் புலமை மட்டுமல்ல, அறிவியல் புலமையும் நம்மை வியக்க வைக்கிறது.

கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *