- இன்றைய பஞ்சாங்கம்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மிகதுல்லியமாக கணித்த தமிழன்!!

Spread the love

சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை -1. எனவே தான் நம் முன்னோர்கள்
தமிழர்கள் சித்திரை-1 ஐ புத்தாண்டாக கொண்டாடினர்கள்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் தான் மிகதுல்லியமாக கணித்து கூறிய வானியல் சாஸ்திரம் இதுதான்.

இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத் தெரியாத பல உண்மைகள் இங்கே உள்ளன.
தமிழ் மாதங்களான..
சித்திரை- 1
ஆடி -1
ஐப்பசி- 1
தை -1

இந்த மாதங்களை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு மற்றும் பழக்க வழக்கம்னு நாம நினைச்சுக்கிட்டு இருக்கோம்.

நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலையே வச்சிருக்காங்கனு தெரியுமா…?

“சூரியன் உதிக்கும் திசை கிழக்கு”என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம் ஆனால்.

என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? இல்லை. என்று தான் சொல்ல வேண்டும்.

வெள்ளைக்காரார்கள் நம் அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று….

ஆம்… சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!

பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்…

அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்…

இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம் என்று கணக்கிடப்படுகிறது..!!

சரி… இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?

சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் “சித்திரை -1”. அதாவது தமிழ் புத்தாண்டு.
(In science it is called Equinox)

அப்புறம்.. சரியாக வடகிழக்கு புள்ளி தான் “ஆடி 1”. அன்று ஆடி பிறப்பு.(solstice)

மறுபடியும் கிழக்குக்கு சூரியன் வரும்போது “ஐப்பசி 1”. தீபாவளி.(equinox)

மீண்டும் சரியாக தென்கிழக்கில் சூரியன் – இப்போது “தை-1”. பொங்கல். (solistice)

இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைத்து மக்களும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்…

சித்திரை (vernal equinox) – புத்தாண்டு.
ஆடி 18 (summer solstice) – ஆடிப்பிறப்பு.
ஐப்பசிஅமாவாசை(autumn equinox)- தீபாவளி.
தை 1(winter solstice) – பொங்கல்.

இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்பது நமது கடமை.

நம் முன்னோர் “தன்னிகரற்ற” மாபெரும் அறிவாளிகள் . மிகவும் மகத்தானவர்கள்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *