- ஆன்மீக செய்திகள், தற்போதைய செய்திகள்

திருமலை திருப்பதி 2000 அடி உயரத்தில் அமைந்துள்ள பெருமாளுக்கு பால் அபிஷேகம்!

Spread the love

திருப்பதி

திருமலை திருப்பதி 2000 அடி உயரத்தில் அமைந்துள்ள பெருமாளுக்கு பால் அபிஷேகம்!

திருப்பதி திருமலையில் 2000 அடி உயரத்தில் அமைந்துள்ள மிகவும் பழைமை வாய்ந்த பெருமாள் சிலைக்கு பால் அபிஷேகம் செய்தும், 1000 கிலோ அளவிலான பூக்களால் தயாரிக்கப்பட்ட மாலை அணிவித்தும் வழிபாடு நடத்தினர்.

திருப்பதியில் இருந்து திருமலைக்கு வாகனங்கள் செல்லும் மலைப்பாதையின் கடைசி வளைவில் உள்ள நாராயணகிரி மலையில், எப்போது அமைக்கப்பட்டது என்பதை கண்டறிய முடியாத பெருமாள் சிலை அமைந்துள்ளது.

சுமார் 2000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பெருமாள் சிலைக்கு புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை என்பதால் திருமலை பாலாஜி நகரை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து குடம்குடமாக சந்தனம் மற்றும் பால் ஊற்றி அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

அதேபோல், 1000 கிலோ பூக்களால் தயார் செய்யப்பட்ட மாலையையும், குடங்களால் தயாரிக்கப்பட்ட மாலையையும் அணிவித்து கற்பூரம் காட்டி வழிபட்டனர். பெருமாளின் அபிஷேகத்தை பார்த்த பக்தர்கள் “கோவிந்தா கோவிந்தா” என கோஷமிட்டு வழிப்பட்டனர்

கோவிந்தா கோவிந்தா

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

1 thought on “திருமலை திருப்பதி 2000 அடி உயரத்தில் அமைந்துள்ள பெருமாளுக்கு பால் அபிஷேகம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *