மதம் மாறியவர்களுக்கு திருப்பதியில் பணியாற்ற முடியாது- TTD
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் மதம் மாறியவர்கள் பணியாற்ற முடியாது; ஆந்திர அரசு
திருமலை திருப்பதி தேவஸ்தான பணிகளில் இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள் நீடிக்க முடியாது என ஆந்திர மாநில முதன்மை செயலாளர் கூறியுள்ளார்
ஆந்திர மாநில முதன்மை செயலாளர் எல்.வி. சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, இந்து மதத்தில் இருந்து தற்போது மதம் மாறியவர்கள் அல்லது பணியில் இருப்பவர்கள் மதம் மாறினால் திருமலை திருப்பதி தேவஸ்தானம், இந்து அறநிலைய துறை பணிகளில் நீடிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.
News 9 வெளியிட்ட செய்தி
இந்து மத சம்பிரதாயங்களை தொடர்ந்து கடைப்பிடிக்கிறார்களா என்பதை கண்காணிப்பதற்காக ஒரு குழு அமைக்க உள்ளதாகவும் கூறினார். இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள், அந்த பணியில் இருப்பதை ஏற்று கொள்ள முடியாது என்றும் சுப்ரமணியன் கூறினார்.
இந்நிலையில் கிருஸ்தவ மிஷனரி ஒன்று தனது முகநூலில் திருமலையை ஆக்கிமிக்க போவது இது தொடக்கம் தான் என்று ஒரு செய்தி மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஓம் நமோ நாராயணா
இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.