- slide, ஆன்மீக செய்திகள், தற்போதைய செய்திகள்

தமிழா! சமஸ்கிருதமா! இந்துக்கள் சண்டை போட அங்கு சர்ச் கட்டி பாதை அடைப்பு!!

Spread the love

தமிழா! சமஸ்கிருதமா! இந்துக்கள் சண்டை போட்டுக்கொண்டிருக்க அங்கு சர்ச் கட்டி ஆக்கிரமிப்பு!!

தமிழகத்தில் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்து கோவில்களுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, அந்த இடங்கள் கிருஸ்துவர்கள் வழிபட எதுவாக சர்ச் கட்டப்பட்டு வருவது தொடர்கதையாகின்றது. சமீப காலமாக இந்து கோவில்கள் அருகில் சர்ச் கட்டும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளது கிருஸ்துவ அமைப்புகள். பின் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் மதமாற்றும் வேளைகளில் ஈடுபட தொடங்கி விடுகின்றனர்.

இந்து கோவில்களுக்கு சொந்தமான மலைகளில் இரவு நேரங்களில் கிருஸ்துவர்கள் வழிபாடும் சிலுவையை நட்டு வைத்து, பின் அதை வழிபட தொடங்குபவர்கள், காலப் போக்கில் அந்த இடத்தில் சர்ச் கட்டிக்கொண்டு, இந்து கோவில் இடங்களை ஆக்கிரமிப்பு செய்து கொள்கின்றனர். இதற்கு சில அரசின் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் துணையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது

தற்போது தஞ்சை வளாகத்தில் மன்னர் காலத்தில் மருத்துவம் செய்து வந்த இந்துகளுக்கு கொடுக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பு செய்து சர்ச் கட்டப்பட்டுள்ளது. ஆக்கிரமித்து சர்ச் கட்டப்பட்டுள்ள இடம் சுவாமி தீர்த்தவாரிக்கு சிவகங்கை குளம் செல்லும் பாதையாகும். தற்போது சுவாமி தீர்த்தவாரிக்கு அந்த பாதையில் செல்ல, ஆக்கிரமித்து சர்ச் கட்டியவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் மதம் மாற்றும் துண்டு பிரசுரங்களை கொடுத்து வருவதாக பக்தர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். தஞ்சை பெரிய கோவிலில் குடமுழக்கு தமிழில் நடத்த பட வேண்டும் என போராட்டம் நடத்தியவர்கள் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க போராட்டம் நடத்துவர்களா என தஞ்சை பெரிய கோவில் குடமுழக்கு விழாவுக்கு வந்த பக்தர்கள் கேட்டுக் கொண்டனர்.

தமிழகத்தில், குறிப்பாக கோவில் இடங்களை குறிவைத்து ஆக்கிரமிப்புகளை செய்து வரும் கிருஸ்துவ அமைப்புக்கு துணையாக முக்கிய அரசியல் கட்சி, தமிழகத்தில் செயல் படுவதாகவும், மேலும் பல அரசு அதிகாரிகள் இதில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் துணை கொண்டு தான் கோவில் இடங்களை துணிந்து ஆக்கிரமித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *