- ஆன்மீக செய்திகள்

சிவன் கோயிலையே ஆட்டையை போட்டு குடும்பம் நடக்குது அறநிலையத்துறை மவுனம் ஏன்!!

Spread the love

சிவன் கோயிலையே ஆட்டையை போட்டு குடும்பம் நடக்குது அறநிலையத்துறை மவுனம் ஏன்!!

ஆக்கிரமிப்பின் உச்சம்! 1000 ஆண்டு பழமையான சிவன் கோயிலை குடும்பம் நடத்தும் வீடாக மாற்றிய போதும் அறநிலையத்துறை மவுனம் காப்பது ஏன் என்று தெரியவில்லை.

“தஞ்சாவூரில் சிவன் கோயில் தனியாருக்கு சொந்தமான வீடானது “

“சாமி இருக்க வேண்டிய கோயில் இடத்தில் ஆக்கிரமிப்பின் காரணமாக ஆசாமிகள் இருக்கிறார்கள்”

தஞ்சை பெரிய கோவில் இருக்கும் புகழ்மிக்க தஞ்சாவூரில் தான் இந்த கொடுமை .

இந்து சமய அறநிலையத் துறையின் அலட்சியத்தால் ,
ஆக்கிரமிப்பாளர்களின் அபகரிக்கும் நோக்கத்தால்,
கையெடுத்து வணங்க கூடிய தெய்வங்கள் வாழ்ந்த இந்து திருக்கோயில் இன்று ஆக்கிரமிப்பு பேர்வழிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு கோயிலையே கொள்ளையடித்து குடும்பம் நடத்தும் வீடாக மாற்றிய கொடுமையை என்னவென்று சொல்வது….

தஞ்சை மாநகரம் ,தெற்கு அலங்கம்,
தொப்புள் பிள்ளையார் கோவில் தெருவில் உயர்ந்து நின்ற கோபுரம் குட்டிச்சுவர் ஆகவும்,

கலையம்சம் பொருந்திய
சிற்ப வேலைப்பாடுகள் எல்லாம் சிதிலமடைந்தும் இந்த சமூக விரோதிகளால் மறைக்கப்படும் சிதைக்கப்பட்டும் இருக்கிறது.

துவாரபாலகர்கள் என்று சொல்லக்கூடிய வாயிற்காவலர்கள் கோயிலுக்கு முன்பாக தான் அமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் இந்த ஆக்கிரமித்த பேர்வழியின் வீட்டின் பாதுகாப்புக்கு வாட்ச்மேன் தேவையில்லை.
ஏனென்று சொன்னால் கோயிலிலேயே பாதுகாத்து துவாரபாலகர்கள் இன்று இவருடைய வீட்டிற்கும் வாயிற்காவலன் ஆக இருக்கிறார்.

பிள்ளையார் ,சந்திரன் சூரியன் போன்ற கலையம்சம் பொருந்திய கற்சிற்பங்கள் எல்லாம் கண் முன்னாடி அழிந்துகொண்டிருக்கும் கொடுமை கண்டுகொள்ளாத அறநிலையத்துறை நினைத்தால் ஏழு ஜென்மத்துக்கும் திருந்துவார்களா என்று தெரியவில்லை.

மன்னர்கள் கட்டிய கோயிலை நம்மவர்கள் ஆக்கிரமித்து அனுபவிக்க நினைப்பது பாவத்திலும் பெரிய பாவம்.
இந்தப் பாவிகளுக்கு தெரியவில்லை.

இந்த பகுதிக்கு சென்று விசாரித்தவர்களிடம் ,ஆக்கிரமிப்பு பேர்வழிகள் சொல்கிறார்கள் இது எங்களுடைய வீடு வீட்டை நாங்கள் கோயில் மாடலில் கட்டி இருக்கிறோம் அரிச்சந்திரனுக்கு அடுத்த வீட்டுக்காரர் போல உண்மை பேசுகிறார்கள்.

கோயிலையே ஆக்கிரமித்து கட்டி இருக்கக்கூடிய இந்த வீட்டிற்கு மின்சாரத்துறை எப்படி மின்சாரம் வழங்கியது என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

இவ்வளவு பெரிய கோவில் காணாமல் போய் கண்டுகொள்ளாத அறநிலைய துறையை என்ன செய்வது?

இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக இங்கே குறிப்பிட்ட இந்த திருக்கோயிலை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு மீண்டும் வழிபாட்டுக்குரிய இந்து சமய திருக்கோயிலாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் .

மேலும் மாவட்ட நிர்வாகம் ,
இந்து சமய அறநிலையத்துறை,
வருவாய்த்துறை அனைவரும் இந்தத் திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் எங்கெல்லாம் இருக்கிறது?
யாருடைய ஆக்கிரமிப்பில் இருக்கிறது என்பது குறித்தான முழு விசாரணை மேற்கொண்டு இந்தக் கோயிலையும் கோயில் சொத்துக்களை மீட்பதற்கு உடனடியாக துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் என இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் சார்பில் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

இல்லாதபட்சத்தில் பொதுமக்களை திரட்டி இந்து சமய திருக்கோவிலை மீட்கக்கூடிய புனிதப் பணியை மேற்கொள்வோம்.

இதற்காக இந்து மக்கள் கட்சி தமிழகம் நீதிமன்றத்திலும் போராடும் நீதிமன்றத்திலும் போராடும் என்பதை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் தமிழக அரசிற்கும் தெரிவித்துள்ளனர்

கோயிலே காணாமல் போகும்போது கண்டு கொள்ளாத அறநிலைய துறை அதிகாரிகளா
சாமி சிலையை பாதுகாக்கப் போகிறார்கள்? என்று டீக்கடையில் பேசிக்கொண்டிருந்த ஒருவருடைய குரல் கேட்டது
தொடரும்……

(படங்களை zoom செய்து பாருங்கள் )
அதிகமாக பகிரவும் .

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

6 thoughts on “சிவன் கோயிலையே ஆட்டையை போட்டு குடும்பம் நடக்குது அறநிலையத்துறை மவுனம் ஏன்!!

  1. Definitely it is a serious issue. The occupants should be driven out of this house.Please take action.

  2. இந்துக்களின் சமய உனர்வை பிரதிப்பளிக்கிறது. அரசன் ஆண்டால் என்ன ஆண்டி ஆண்டால், நான், என் குடும்பம் என் உறவினர்கள் வாழ்ந்தால் போதும். திராவிட சித்தாந்தம், சினிமா மோகம் ஆட்கொண்டுல்லது. கூடிய விரைவில்
    சிலுவையும், குல்லாவையும் அனியிம்
    காலம் வெகு தூரம் இல்லை.

  3. may be the aerchagars/kurukkal would have occuppied as they have not given a separate living house nearby
    and it is responsibility of the Hindu endowment board to provide quarters srpartely

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *