- ஆன்மீக செய்திகள், தற்போதைய செய்திகள்

சபரிமலை கோவில் நடை திறப்பு…!

Spread the love

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு…!

மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடைதிறக்கப்படுவதை ஒட்டி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து தீபாராதனை நடத்துகிறார். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்படும்.

அதன்பிறகு புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி சன்னிதானத்தில் நடைபெறும். பின்னர் 18-ம் படிக்கு கீழே காத்திருக்கும் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.

அன்றைய தினம் மற்ற பூஜைகள் எதுவும் நடைபெறாது. பக்தர்களின் தரிசனத்துக்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, கோவில் சாவி புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரியிடம் ஒப்படைக்கப்படும்.

மறுநாள் அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். அடுத்த மாதம் 27-ந்தேதி மண்டல பூஜை மற்றும் ஜனவரி 15-ந்தேதி மகர விளக்கு பூஜை நடைபெறுவதை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் 5அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *