- slide, ஆன்மீக செய்திகள், தற்போதைய செய்திகள்

அடர்ந்த காட்டுக்குள் குழந்தையின் உயிரை காப்பாற்றிய பழனி முருகன்! உண்மை சம்பவம்!

அடர்ந்த காட்டுக்குள் தவறி விழுத்த குழந்தையின் உயிரை காப்பாற்றிய பழனி முருகன்! உண்மை சம்பவம்!

வருவான்டி தருவான்டி மலையான்டி
பழநி மலையாண்டி

சமீபத்தில் நாம் எல்லோரும் அறிந்த ஒரு அதிர்ச்சியூட்டும் நிகழ்ச்சியை மீண்டும் நினைவு கூற விரும்புகிறேன்.

சில நாட்களுக்கு முன்பு கேராளவை சேர்ந்த தம்பதியர் பழநி பாலதண்டாயுதபாணி ஸ்வாமியை தரிசனம் செய்து விட்டு தமது மகளுக்கு மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திவிட்டு மீண்டும் சொந்த ஊர் திரும்பும் வழியில்
அடர்ந்த வனப்பகுதியில் சென்றுக்கொண்டிருந்த ஜீப்பில் தாயும் மகளும் பின் புற இருக்கையில் அமர்ந்திருந்தனர்….!!!

சோர்வின் காரணமாக கண் அயர்ந்த தாய் பிள்ளை தன் மாடியிலிருந்து தவறி காட்டுப்பகுதியில் விழுந்ததை அறியாமலே வீடு திரும்பியுள்ளார்.

என்ன ஆச்சரியம் என்றால் அந்த போக்குவரத்து மலை சாலையின் ஓரத்தில் அந்த குழந்தை தவழ்ந்து இப்புறம் வந்துவிட்டது…..!!

இந்நிலையில் அந்த பகுதியில் வேட்டை தடுப்பு கண்காணிப்பு கேமராவில் இந்நிகழ்வு பதிவாகியுள்ளது…!!

உடலில் காயங்களுடன் அந்த பிள்ளை அந்த இருட்டில் தனியாக இருப்பதை அறிந்து குழந்தையை மீட்டனர் வனத்துறை அதிகாரிகள்.

மனதில் எழும் சில கேள்விகளுடன் பேசி கொண்டு இருந்தோம்.

1)அந்த வனபகுதி வரையாடுகள் நிறைந்தது ஆதலால் சிறுத்தைகள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்று.

2)காயப்பட்ட குழந்தையின் இரத்த வாடை வனவிலங்குகளை எளிதில் ஈர்த்துவிடும்.

3)பின் தொடர்ந்து வரும் வாகனங்கள் கவனிக்காமல் வந்திருந்தால் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.

4)தவறி விழுந்த குழந்தைக்கு பலத்த அடியும் படவில்லை.

5)வேட்டை கண்காணிப்பு கேமராவில் இந்த நிகழ்ச்சியை கவனிக்காமல் சென்றிருந்தால்.

6)தவறி விழுந்த குழந்தை அழுதிருந்தாலும் வனவிலங்குகளை ஈர்த்திருக்கும் ஆனால் நடந்தது என்ன தெரியுமா…???

குழந்தை அழவில்லை…!!!!
சாலையில் தவழ்ந்து அப்புறம் சென்றுவிட்டது…!!!
உடல் காயங்களால் வந்த இரத்த போக்கில் எந்த ஒரு வனவிலங்குகளையும் ஈர்க்கவில்லை..!!
சரியான நேரத்தில் கேமராவை கவனித்த அதிகாரி…!!!

இதை பற்றி பேசிக்கொண்டிருந்த வேளையில் தான் டிவியில்..

சிவனாண்டி மகனாகப் பிறந்தான்டி அன்று
சினம் கொண்டு மலை மீது அமர்ந்தான்டி
நவலோக மணியாக நின்றான்டி என்றும்
நடமாடும் துணையாக அமைந்தான்டி
அவன் தான்டி
வருவான்டி தருவான்டி மலையாண்டி
பழனி மலையாண்டி!

என்ற பாடல்…
நானும் அத்தனை பேரும் சிரித்து கொண்டு இதுவும் உன் செயல் அன்றோ முருகா என நினைத்து கொண்டோம்.

முருக பெருமான் அருள் கருணை மற்றும் ஆசீர்வாதம் எப்போதும் எல்லோருக்கும் கிடைக்கும் முருகா சரணம்

அகிலன்

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *